இனி சுறா மாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன் : தமன்னா

நடிகை தமன்னா 'கேடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தமிழ் சினிமாவை கடந்து தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் 'ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். இதன் புரொமோஷனுகாக யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் தமன்னா.

அதில் “நான் நடித்ததில் சுமாரான படமென்றால் நிறைய படம் இருக்கு. சுறா படம் எனக்கு பிடிக்கும். இருந்தாலும் அந்த படம் தான் நான் நடித்ததில் மோசமான படம் என நினைக்கிறேன். அந்த படத்தில் நிறைய இடங்களில் நான் கேவலமா இருந்தேன். இனிமேல் அது போன்ற படங்களில் நடிக்க மாட்டேன். சுறா படம் நல்லா போகாது என படப்பிடிப்பின் போதே எனக்கு தோனுச்சு. நிறைய படங்கள் நாம் நடிக்கும் போதே தோணும். அது சரியா போகாது. வெற்றி, தோல்வியை தாண்டி நம்ம அந்த படத்தில் ஒப்பந்தமாகிருக்கோம் என்பதற்காக மட்டும் அதில் பல சூழ்நிலைகளில் நடிக்க வேண்டி உள்ளது. சினிமாவில் கோடி கணக்கில் பணம் போடுகின்றனர். அதை உணர்ந்து அந்த படத்தை முடித்து கொடுக்க வேண்டியது நம் கடமை ” என இவ்வாறு நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.