குக் வித் கோமாளி பரிசு பணத்தில் கேன்சர் நோயாளிகளுக்கு உதவி : மைம் கோபிக்கு குவியும் பாராட்டுகள்
குக் வித் கோமாளி சீசன் 4 இறுதிப்போட்டி நடந்து முடிந்தது. இதில், சிவாங்கி தான் வெற்றி பெறுவார் என பலரும் கூறி வந்த நிலையில், இறுதி போட்டியில் மைம் கோபியே வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முடிவை ரசிகர்களும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர். அதுமட்டுமில்லாமல் இதுவரை நடந்த சீசன்களிலேயே மைம் கோபி தான் முதல் ஆண் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மைம் கோபிக்கு பரிசுத்தொகையாக 5 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த பணத்தை தனக்கு என்று இல்லாமல் புற்றுநோயால் பாதிக்கபட்டவர்களின் சிகிச்சைக்கு கொடுக்க போவதாக மைம் கோபி கூறியுள்ளார். மைம் கோபியின் இந்த செயலை பாராட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.