கே.பி.முனுசாமி போட்ட வெடி… நேரம் பார்க்கும் அதிமுக… பாஜக வேற மாதிரி அரசியல் டீலிங்!

மதுரையில் வரும் 20ஆம் தேதி அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டமாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதற்கு முன்னாள் அமைச்சர்கள் பலரும் தலைமை ஏற்று வருகின்றனர்.

அதிமுக vs திமுக அரசியல்இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் பேச்சு கவனம் பெற்று வருகிறது. சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பேசிய கே.பி.முனுசாமி, தமிழகத்தில் நேரடி போட்டி என்றால் அதிமுக, திமுக ஆகியவற்றுக்கு இடையில் தான். பல கட்சிகள் நம்முடன் கூட்டு சேரலாம். ஆனால் களத்தில் நின்று போராடுபவன் அதிமுகவின் சாதாரண தொண்டன் தான்.​பாஜகவின் அரசியல் கணக்குஅவனை எதிர்த்து போராடுபவன் திமுககாரனாக தான் இருப்பான். தேசிய கட்சிகள் யாரும் வருவதில்லை. கூட்டணி கட்சிகள் யாரும் வருவதில்லை என்று தெரிவித்தார். இது பாஜகவை சீண்டும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில் தமிழகத்தில் காலூன்ற, அதுவும் தனித்து காலூன்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. தற்போதைக்கு அதிமுகவின் தயவை நம்பியிருந்தாலும் சில திரை மறைவு டீலிங்குகள் மூலம் அக்கட்சியை ஒருகட்டத்தில் கழட்டி விடவும் வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.மோடியா? EDயா?இதையொட்டி அதிமுகவை அட்டாக் செய்து பாஜக தலைவர்கள் பேசுவதை மறுப்பதற்கில்லை. கே.பி.முனுசாமி பேச்சு தொடர்பாக பேசிய தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், கே.பி.முனுசாமி பேச்சு சரி தான். தமிழகத்தில் எப்போதும் திராவிட கட்சிகளின் ஆட்சி தான். மோடியா, லேடியா என்ற பேசிய ஜெயலலிதா தற்போது இல்லை. அதேசமயம் மோடியா, EDயா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல்மோடி உடன் கைகோர்ப்பதா? இல்லை ED-ன் விசாரணை வளையத்திற்குள் சிக்குவதா? என்பது தான் கள யதார்த்தமாக மாறியிருக்கிறது. தற்போதைய சூழலில் அதிமுகவின் ஓட்டு வங்கியில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அதை மறுக்க முடியாது. இந்த விஷயத்தை வரும் மக்களவை தேர்தல் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதிமுகவை பொறுத்தவரை 2024 மக்களவை தேர்தலை காட்டிலும் 2026 சட்டமன்ற தேர்தலை தான் பெரிதாக எதிர்பார்த்து காத்திருப்பதாக தோன்றுகிறது.
அதிமுக, பாஜக வாக்கு வங்கிஅதேசமயம் அடுத்து வரும் தேர்தலில் வாக்குகள் பரிமாற்றம் தேவை என பாஜக எதிர்பார்க்கிறது. அதிமுக வாக்குகள் பாஜகவிற்கும், பாஜக வாக்குகள் அதிமுகவிற்கும் கிடைக்க வேண்டும். இதில் முதல் விஷயம் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் பாஜக வாக்குகள் அதிமுகவிற்கு கிடைக்க வாய்ப்புகள் இல்லை என்று கூறினார். எனவே அதிமுகவின் கணக்கின் படி, வரும் மக்களவை தேர்தலில் பாஜகவிற்கான இடங்களில் கை வைக்கும்.
சரியான அரசியல் பதிலடிகுறைந்த இடங்களே அளிக்கப்படும் என்று கூறுவர். அதற்கு பாஜக ஒத்துக் கொண்டால் சரி. இல்லையெனில் தனித்து போட்டியிட்டு கொள்கிறோம் என்று பாஜக நடையை கட்டலாம். அப்படி நடந்தால் அதிமுக பெருமூச்சு விட்டு தனித்து களமிறங்க அனைத்து வேலைகளிலும் ஈடுபடும். இப்படியான அரசியல் சூழலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாஜகவிற்கு அதிமுக தக்க பதிலடி கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.