கொண்டாடப்படும் 'மாமன்னன்' ரத்னவேல் கதாபாத்திரம்.. மாரி செல்வராஜ் எச்சரிக்கை: வைரலாகும் ட்வீட்.!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரின் பாராட்டு மழையிலும் இந்தப்படம் நனைந்தது. இந்நிலையில் திரையரங்கை தொடர்ந்து அண்மையில் ஓடிடியில் ரிலீசாகியுள்ள ‘மாமன்னன்’ படம் அதிலும் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

உதயநிதியின் கடைசி படமாக வெளியான இந்தப்படத்தில் அவர் அதிவீரனாகவும், அவரின் தந்தை மாமன்னனாக வடிவேலுவும், ரத்னவேலுவாக பகத் பாசிலும் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அது மட்டும் இல்லாமல் பலரின் வாழ்த்து மழையிலும் நனைந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் திரையரங்கை தொடர்ந்து ஓடிடியில் வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தில் இடம்பெறும் ரத்னவேலுவின் கதாபாத்திரத்தை சில சாதியவாதிகள் கொண்டாடி வருகின்றனர். அவரவர் சாதி பெருமைகள் பேசும் பாடல்களை ரத்னவேல் கதாபாத்திரத்துடன் இணைத்து இணையத்தில் உலவ விட்டு வருகின்றனர். இது தொடர்பான சர்ச்சைகள் கடந்த சில நாட்களாக வெடிக்க, இந்த எடிட்களுக்கு எதிராக பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசிக கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘மாமன்னன் திரைப்படம் வெளிவந்ததிலிருந்து சாதியவாதிகளுக்கு பதட்டம் பீறிட்டு, என்ன செய்வது என தெரியாமல் பிதற்றி வருகிறார்கள். வெளிவந்த நாளில் தென்மாவட்டங்களில் தியேட்டர்களை முற்றுகையிட்டன சாதியவாதிகள்.

Jailer: நெருங்கும் ரிலீஸ் தேதி: ‘ஜெயிலர்’ ரஜினிக்கு பறந்த திடீர் கோரிக்கை.!

அப்புறம் தான் கதைக்களமே தென்மாவட்டம் இல்லை என தெரிந்து தலையை சொறிந்து கொண்டனர். இப்போது ரத்னவேல் கதாபாத்திரத்தை சாதியவாதிகள் கொண்டாடி வருகின்றனர். அதாவது, நாயை படுகொலை செய்வதை கொண்டாடுவது, சொந்த சாதிக்காரனையே படுகொலை செய்வதை கொண்டாடுவது என சாதிய மனநோயாளிகளாக மாறுகின்றனர்.

அதுவும் அவரவர் சாதிகளை இணைத்து சாதிப்பெருமையோடு பதிவிட்டு வருகின்றனர். இதில் சாதியவாதிகளுக்கு மகிழ்ச்சி என்பது தற்காலிகம் தான். ஏனெனில், சாதியவாதின ரத்னவேலுக்கு ஏற்படும் சோக முடிவை யாரும் மறந்திருக்க முடியாது. நாளை சாதியவாதிகளுக்கு இந்த முடிவுதான் ஏற்படும் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜ் எச்சரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சந்தானம் கம்பேக் கொடுத்துள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மூன்று நாள் வசூல் இவ்வளவா.?: அடேங்கப்பா..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.