கோடநாடு அரசியல்… டிடிவி உடன் ஓபிஎஸ் போடும் கணக்கு… அதிமுக ர.ர.,கள் ரியாக்‌ஷன் என்ன?

தமிழகத்தில் க்ரைம் சீரிஸ்க்கு போட்டியாக கடந்த 6 ஆண்டுகளாக இழுபறியாக சென்று கொண்டிருக்கிறது கோடநாடு விவகாரம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரி எஸ்டேட்டில் மர்மமான முறையில் கொலை, கொள்ளை நடந்தது ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியது. அதன்பிறகும் அசம்பாவிதங்கள் தொடர்ந்தன. இதில் சந்தேகப்படும் வகையில் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தொண்டர்களின் விருப்பம் அதைத்தான் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்- மனோஜ் பாண்டியன்

கோடநாடு விவகாரம்

இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் மெத்தனப் போக்குடன் திமுக அரசு செயல்பட்டு வருவதாக முன்னாள் முதலமைச்சர்

குற்றம்சாட்டியுள்ளார். இதை கண்டித்து இன்று (ஆகஸ்ட் 1) மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சரியாக சொல்ல வேண்டுமெனில் அனைத்து வருவாய் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

தேனியில் கைகோர்த்த ஓபிஎஸ், டிடிவி

குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனியில் நடந்து வரும் ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கைகோர்த்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு வெளியான போதே ஓபிஎஸ் உடன் தானும் களத்தில் இருப்பேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். அவர் கூறிய படியே இன்று ஒரே மேடையில் காட்சி அளித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், சம்பவம் நடந்த அன்று தடையில்லா மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திமுக அரசு என்ன செய்கிறது?

இதை யார் செய்ய சொன்னது? செய்தது யார்? இத்தகைய கேள்விகளுக்கான விடையை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இங்கே போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். தற்போது மக்கள் முன்னால் பிரச்சினையை கொண்டு வந்திருக்கிறோம். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கோடநாடு விஷயத்தில் உடனடியாக தீர்வு வர வேண்டும். தீர்வு வர தாமதமானால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று பேசினார்.

தர்ம யுத்த நாயகன்

ஓபிஎஸ்சின் ஆர்ப்பாட்டம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. முதலில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டார். அதன்பிறகு மோடி சொன்னார் எனக் கூறிவிட்டு

உடன் கைகோர்த்து கொண்டார். தற்போது கோடநாடு விவகாரத்தில் உண்மையை கண்டறிய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளார். இவர் துணை முதலமைச்சராக இருந்த போது என்ன செய்தார்?

திரை மறைவு அரசியல்

ஏன் அப்போதே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? ஆட்சி பறிபோன நிலையில் திமுகவை பார்த்து விமர்சனக் கண்ணோட்டத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏன்? ஒன்று மட்டும் நிச்சயம். கோடநாடு விவகாரத்தை வைத்து ஓ.பன்னீர்செல்வம் அரசியல் செய்கிறார் என்று அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகின்றனர். இதையொட்டி நடைபெறவுள்ள திரை மறைவு விஷயங்கள் எதை நோக்கி ஓபிஎஸ்சை கொண்டு செல்லுமோ என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.