புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி ஆசாத்பூர் மண்டி (சந்தைக்கு) சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ராகுல் காந்தி சந்தையில் காய்கறிகளின் விலையை வியாபாரிகளிடம் கேட்டறிவது பதிவாகியுள்ளது.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் ஆசாத்பூர் சந்தையில் கண்ணீர் மல்கப் பேசிய காய்கறி வியாபாரி ஒருவரின் வீடியோவைப் பகிர்ந்தார். அதில் ராமேஷ்வர் என்ற காய்கறி வியாபாரி, “தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. என்னால் தக்காளி வாங்கி விற்பனை செய்ய இயலவில்லை. அப்படியே வாங்கினாலும் அதை என்ன விலையில் விற்பது என்பதும் தெரியவில்லை. சிலர் தக்காளிகளை இருப்பு வைத்துள்ளனர். மழையில் அது அழுகிப்போக வாய்ப்புள்ளது.
देश को दो वर्गों में बांटा जा रहा है!
एक तरफ सत्ता संरक्षित ताकतवर लोग हैं जिनके इशारों पर देश की नीतियां बन रही हैं।
और दूसरी तरफ है आम हिंदुस्तानी, जिसकी पहुंच से सब्ज़ी जैसी बुनियादी चीज़ भी दूर होती जा रही है।
हमें अमीर-गरीब के बीच बढ़ती इस खाई को भर, इन आंसुओं को पोंछना… pic.twitter.com/zvJb0lZyyi
— Rahul Gandhi (@RahulGandhi) July 28, 2023
அதனாலும் நஷ்டம் ஏற்படும். பணவீக்க உயர்வால் என் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருநாளைக்கு ரூ.200 சம்பாதிப்பதே கடினமாக இருக்கிறது” என்று கண்ணீர் மல்கப் பேசியிருந்தது பதிவாகியிருந்தது. இந்நிலையில், இன்று ராகுல் காந்தி ஆசாத்பூர் மாண்டிக்குச் சென்று வியாபாரிகளுடன் உரையாடியுள்ளார்.
கடந்த மே மாதம் ராகுல் காந்தி திங்கள்கிழமை பின்னரவில் டெல்லியில் இருந்து சண்டிகர் வரை லாரியில் பயணம் செய்தார். லாரி ஓட்டுநர்களுடன் ராகுல் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவைப் பகிர்ந்த காங்கிரஸ் கட்சி, “ராகுல் காந்தி லாரி டிரைவர்களுடன் பயணித்து, அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொண்டார். அவர் டெல்லியில் இருந்து சண்டிகருக்கு பயணம் செய்தார். ஊடகங்களின் தகவல்படி, இந்திய சாலைகளில் சுமார் 9 லட்சம் லாரி டிரைவர்கள் பயணித்தபடி இருக்கின்றனர். அவர்களுக்கும் சொந்தப் பிரச்சினைகள் உள்ளன. அவர்களின் மனதின் குரலை கேட்கும் வேலையை ராகுல் காந்தி செய்தார்” என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.