தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பாலம் கட்டும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 17 தொழிலாளர்களில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்தோஷ், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாலத்தைக் கட்டிவந்த VSL லிமிடெட் கட்டுமான நிறுவனத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்தோஷ் மேனேஜராக பணியாற்றி வந்தார். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதனிடையே, எதிர்பாரா இந்த விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உடலை விமானம் மூலம் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.