அங்காரா,
துருக்கியில் கிழக்கு கார்ஸ் மாகாணத்தின் எர்சுரம்-கார்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அங்குள்ள காராகுட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த 50 மீட்டர் ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
இதனையடுத்து தகவலின்பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 23 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :