புதுடெல்லி: சென்னை மெரினாவில் அமையவுள்ள பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தவிடக் கோரிய பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அவருக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் […]