மகளிர் உரிமைத் தொகை: வெளியான புதிய அறிவிப்பு… மு.க.ஸ்டாலின் கொடுக்கும் சர்ப்ரைஸ்!

தமிழகத்தில் இனி பசியோடும், வறுமையோடும் ஒரு ஜீவன் கூட உறங்கக் கூடாது. சமூக நீதியும், சமத்துவமும் மக்களை ஏற்றம் காணச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர்

தலைமையிலான

அரசு செயல்பட்டு வருவதாக உடன்பிறப்புகள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளனர். இந்த பயணத்தில் வரலாற்று சிறப்புமிக்க திட்டமாக இடம்பெறப் போவது “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டம். இதன்மூலம் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய் கிடைக்கும்.

இந்தியாவிலே சிறந்த திட்டம் மகளிர் உரிமை திட்டம் தான் – அமைச்சர் முத்துசாமி

மகளிர் உரிமைத் தொகை திட்டம்

வெறும் 1,000 ரூபாய் என்ன செய்துவிடப் போகிறது எனக் கேட்கலாம். மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பார்வையில் இது சாதாரணமாக தெரியலாம். ஆனால் கீழ்த்தட்டு மற்றும் தினக் கூலிகளுக்கு இதன் முக்கியத்துவம் தெரியும். எப்படி பெண்களுக்கு இலவசப் பயணம் புதிய புரட்சிக்கு வித்திட்டு மக்கள் பெரிய அளவில் பலனடைந்து வருகிறார்களோ? அதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமும் மிகப்பெரிய பலன் தரும் என்கின்றனர்.

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இத்தகைய எதிர்பார்ப்புகளுடன் தான் செப்டம்பர் 15ஆம் தேதியை தமிழக மக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். அன்றைய தினம் தான் மேற்குறிப்பிட்ட திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் வீடு வீடாக சென்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளின் அடிப்படையில் வழங்கப்பட்டது.

என்னென்ன நிபந்தனைகள்?

பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்பிக்க அந்தந்த ஊர்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த திட்டம் ஏணி போல் ஏற்றி விடும் வகையில் சரியான நபர்களை சென்றடைய பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, பெண் அரசு ஊழியர்கள், பெண் எம்.எல்.ஏ மற்றும் பெண் எம்.பிக்கள், ஆண்டிற்கு 2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறும் குடும்ப தலைவிகள், சொந்தமாக கார் வைத்திருப்போர், 5 ஏக்கர் நிலம் வைத்திருப்போர்,

ஸ்டாலின் செலக்ட் பண்ண காஞ்சிபுரம்

ஆண்டிற்கு 3,600 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் உள்ளிட்டோருக்கு 1,000 ரூபாய் கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் போது ஏதேனும் ஒரு மாவட்டத்தை, நகரை தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக ஸ்டாலின் தேர்வு செய்திருப்பது காஞ்சிபுரம்.

பேரறிஞர் அண்ணா

இங்கிருந்து தான் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதில் காஞ்சிபுரம் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது. நிர்வாக ரீதியில் பல காரணங்கள் இருந்தாலும் திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணாவின் சொந்த ஊர் காஞ்சிபுரம் என்பது கவனிக்கத்தக்கது.

திமுக உ.பி.,க்கள் குஷி

114 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா பிறந்த ஊரில், 73 ஆண்டுகளுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்ட திமுகவின் தற்போதைய தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் நிலையை மேம்படுத்த சிறப்புமிக்க திட்டத்தை தொடங்கி வைத்து வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதிக்கப் போகிறார் என அக்கட்சியின் உடன்பிறப்புகள் உற்சாகமாய் கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.