டில்லி பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வராமல் 130 கோடி மக்களை அவமதிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதற்கு மோடி செவி சாய்க்காததால் அமளி ஏற்பட்டு நாடாளுமன்ற அவைகள் தொடர்ந்து முடக்கப்படுகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள், ”மணிப்பூர் மாநிலத்தில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுபோல் பல சம்பவங்கள் நடந்திருப்பதாக முதல்வரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆகவே, நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்துவதுதான் […]