68வது மாடியில் இருந்து விழுந்த சாக வீரர் 'டேர் டெவில்' … கடைசி நொடியில் ஜன்னலை தட்டி… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரெஞ்ச் சாகச வீரர் டேர் டெவில் ரெமி லூசிடி. சாகசங்ளுக்கு பெயர் போனவர். மிக உயரிய கட்டடங்களில் கண்ணிமைக்கும் பொழுதில் ஏறி பிரமிக்க வைப்பார் ரெமி லூசிடி. அவரது இந்த சாகத்திற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது சாக வீடியோக்கள் சமூக வலைதள பக்கங்களில் குவிந்து கிடக்கின்றன.

இந்நிலையில் தனது ஓய்வை கழிக்க ஹாங்காங் சென்றுள்ளார் ரெமி லூசிடி. அங்குள்ள ட்ரெகுண்டர் டவருக்கு சென்ற அவர் 40 வது தளத்தில் இருக்கும் தனது நண்பரை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். டவர் ஊழியர்கள் 40வது தளத்தில் உள்ள அறையை தொடர்பு கொண்டு விசாரிப்பதற்குள் மளமளவென லிப்ட்டில் 49 வது தளத்திற்கு சென்ற ரெமி லூசிடி பின்னர் அங்கிருந்து லிப்டில் 68வது தளத்திற்கு சென்றுள்ளார்.

திருப்பதி லட்டு: நந்தினி போட்ட ஒரே போடு… தூக்கியடித்த தேவஸ்தானம்… தட்டி தூக்கிய அமுல்… பரபரப்பு தகவல்!

ரெமி லூசிடியை பின்தொடர்ந்து செல்வதற்குள் அவர் டவரின் உச்சிக்கு அதாவது, 68வது தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்துள்ளார். இதில் ரெமி லூசிடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னதாக மேல் இருந்து கீழே விழுந்த லூசி, இடையில் இருந்த கம்பியை பிடித்து தொங்கிக்கொண்டு உயிருக்கு போராடியுள்ளார்.

அப்போது அங்குள்ள அறை ஒன்றின் ஜன்னலை வெளியில் இருந்தப்படி தட்டியுள்ளார். இதனை அந்த அறையில் இருந்த பெண் உறுதிப்படுத்தியுள்ளார். கடைசி நொடியில் யாராவது உதவ மாட்டார்களா, உயிர் பிழைக்க மாட்டோமா என முயற்சி செய்துள்ளார் ரெமி லூசிடி. போலீசாரும் மேல் இருந்து கீழே விழுந்த ரெமி லூசிடி உதவிக்காக ஜன்னலை தட்டியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

பிங்க் நிற பட்டு சேலையில் அழகு பதுமையாக பாக்கியலட்சுமி ராதிகா… அசத்தல் போட்டோஸ்!

ரெமி லூசிடியின் கேமராவை கைப்பற்றிய போலீசார் அதில் அவர் உயரமான இந்த கட்டடத்தில் ஏறும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இருப்பினும் அவரது மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் வெளியாகவில்லை. 30 வயதே ஆன ரெமி லூசிடியின் மரணம் குறித்து அறிந்த ரசிகர்களும் நெட்டிசன்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். ரெமி லூசிடியை, அவரது ரசிகர்கள் டேர் டெவில் என அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.