Angus Cloud: தந்தை இறந்த ஒரே வாரத்தில் மறைந்த 25 வயது ஹாலிவுட் நடிகர் – சோகப் பின்னணி!

HBOவில் நெடுந்தொடராக ஒளிப்பரப்பாகும் `Euphoria’ தொடர் மூலம் பிரபலமானவர் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் ஆங்கஸ் க்ளவுட் (Angus Cloud).

இவரது தந்தை உடல்நலக் குறைவால் கடந்த வாரம் காலமானார். ஆங்கஸ், தன் தந்தையின் மீது அதிகப் பிரியம் கொண்டவர். இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்தவர்கள். திடீரென நிகழ்ந்துவிட்ட தந்தையின் மறைவவை ஆங்கஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக தனது குடும்பத்தினருடன் சரியாகப் பேசாமல் தனிமையேலேயே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

ஆங்கஸ் க்ளவுட்

இந்நிலையில் தந்தை இறந்த சில தினங்களிலேயே ஆங்கஸ் க்ளவுடும் நேற்று (ஆகஸ்ட் 1ம் தேதி) இறந்துவிட்டார். இவரது இறப்பு குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆங்கஸ் க்ளவுடின் இந்த எதிர்பாராத இறப்பு அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆங்கஸ் க்ளவுடின் இழப்பு குறித்து வருத்தத்துடன் பேசிய அவரது குடும்பத்தினர், “கனத்த இதயத்துடன் ஆங்கஸ் க்ளவுடுக்கு இன்று பிரியா விடைக் கொடுத்தோம். ஒரு நடிகராக, நண்பனாக, மகனாக, சகோதரனாக அவன் எங்களுக்கு ஸ்பேஷலான ஒருவன். கடந்த வாரம் தன் தந்தையை இழந்துவிட்ட அவன், அந்தச் சோகத்திலுருந்து மீள முடியாதவாக இருந்தான். அவ்வப்போது அவன் தந்தையின் மறைவால் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் பற்றி எங்களிடம் சொன்னான். ஆனால், நாங்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டோம். அவன் மனஅழுத்தத்துடன் தனியாகவே போராடியுள்ளான். இப்போது எங்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், அவன், தனது நெருக்கமான நண்பரான அவனது தந்தையிடமே சென்று சேர்ந்துவிட்டான் என்பதுதான்.

‘இதுபோன்ற மீள முடியாத மன அழுத்ததில் இருப்பவர்களை தனிமையில் விட்டுவிடாதீர்கள், அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும்’ என்பதே ஆங்கஸ் க்ளவுட்டின் இறப்பு நமக்குச் சொல்லும் பாடம்” என்று கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.