தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். அண்மையில் இவர் தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவர் தற்போது நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வெளியானது. இந்த மிரட்டலான முன்னோட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவரை பாராட்டியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு மொழியில் தனுஷ் நடிப்பில் கடைசியாக ‘வாத்தி’ படம் வெளியானது. இந்தப்படத்தை தொடர்ந்து ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது இந்தப்படம். தனது அண்ணனை வைத்து ‘சாணிக்காயிதம்’ படத்தை இயக்கிய அருணுடன் கைகோர்த்துள்ளார் தனுஷ்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான ராக்கி, சாணிக்காயிதம் படங்கள் ராவாக ரத்தம் தெறிக்க தெறிக்க ரிலீசானது. இந்தப்படத்தின் மிரட்டலான மேக்கிங்கால் கவனம் ஈர்த்தார் அருண். இந்நிலையில் தற்போது அவரின் மூன்றாவது படைப்பாக ‘கேப்டன் மில்லர்’ படம் உருவாகியுள்ளது. 1930 ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களாக இந்தப்படம் உருவாகியுள்ளது.
Tamannaah: விஜய்யிடம் இந்த கேள்வியை கேட்டு கன்பார்ம் பண்ணனும்: தமன்னா
இந்நிலையில் அண்மையில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ டீசரில் தனுஷின் மிரட்டலான தோற்றமும், அவர் துப்பாக்கியை கையாளும் விதமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதே போல் டீசரில் தெரியும் படத்தின் மிரட்டலான மேக்கிங், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், நடிகை பிரியங்கா அருள் மோகனின் ஆகியோரின் லுக் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
கொண்டாடப்படும் ‘மாமன்னன்’ ரத்னவேல் கதாபாத்திரம்.. மாரி செல்வராஜ் எச்சரிக்கை: வைரலாகும் ட்வீட்.!
இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மிரட்டலான புதிய போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் தனுஷ். இந்த போஸ்டரை அவரது ரசிகர் ஒருவர் தயார் செய்துள்ளார். இதனை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ளார் தனுஷ். ரசிகர்களை இந்த மாதிரி விஷயங்களில் பாராட்டி ஊக்குவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதனையடுத்து தனுஷின் இந்த செயலை ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர். ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தொடர்ந்து தனது ஐம்பதாவது படத்தை தனுஷே இயக்கி நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதனையடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா டைரக்ஷனில் தனுஷ் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.