உதயநிதியின் நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் கடந்த மாதம் மாமன்னன் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். மேலும் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இப்படம் உதயநிதியின் கடைசி படம் என்பதாலும், மாரி செல்வராஜுடன் உதயநிதி கூட்டணி அமைத்துள்ளார் என்பதாலும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் வைகைப்புயல் வடிவேலு வித்யாசமான ரோலில் நடித்துள்ளதாலும் ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலாக இருந்தனர்.
மாமன்னன் ரெஸ்பான்ஸ்
அந்த எதிர்பார்ப்பை மாமன்னன் திரைப்படம் பூர்த்தி செய்தது என்றுதான் சொல்லவேண்டும். கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் வடிவேலு மற்றும் உதயநிதியின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டை பெற்றது.
Vijay: விஜய்யும் நானும் நட்பாக பேசி பிரிந்தோம்..எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை..ஓபனாக பேசிய இயக்குனர்..!
இந்நிலையில் திரையில் வெற்றிகரமாக ஓடிய மாமன்னன் திரைப்படம் கடந்த வாரம் OTT யில் வெளியானது. OTT யிலும் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் மாமன்னன் திரைப்படம் இருந்து வருகின்றது. இது படக்குழுவிற்கு ஒருபக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் மறுபக்கம் சற்று அதிர்ச்சியையும் தந்துள்ளது.
அதாவது திரையில் மாமன்னன் திரைப்படம் வெளியானபோது வடிவேலுவையும், உதயநிதியையும் கொண்டாடிய ரசிகர்கள் தற்போது ஃபஹத் பாசிலின் கதாபாத்திரத்தை தான் கொண்டாடி வருகின்றனர். ரத்னவேலு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஃபஹத் பாசிலை ரசிகர்கள் கொண்டாடி வருவதை பார்த்த பலர் சற்று அதிர்ச்சியில் தான் இருக்கின்றனர்.
ரத்னவேலு கதாபாத்திரத்தை வைத்து மாஸாக எடிட் செய்து ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் மாமன்னன் திரைப்படத்தில் ரத்னவேலு தான் ஹீரோ என்பதை போலவும் சிலர் எடிட் செய்து வருகின்றனர். என்னதான் ஃபஹத் பாசில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தை ரசிகர்கள் இந்த அளவிற்கு கொண்டாடுவது சற்று வியப்பாயாகவே உள்ளது என பொதுவான ரசிகர்கள் சிலர் கமன்ட் செய்து வருகின்றனர்.
ஃபஹத் பாசிலின் ரியாக்ஷன்
தற்போது இணையத்தில் எங்கு திரும்பினாலும் ஃபஹத் பாசில் தான் தெரிகிறார். அந்த அளவிற்கு கடந்த சில தினங்களாக செம ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றார் ஃபஹத் பாசில். இந்நிலையில் தற்போது ஃபஹத் பாசில் தன் முகநூல் பக்கத்தில் கவர் பிக்கை மாற்றியுள்ளார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
மாமன்னன் ரத்னவேலு புகைப்படத்தை ஃபஹத் பாசில் தன் கவர் பிக்காக வைத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஃபஹத் பாசிலும் இந்த கதாபாத்திரத்தை மிகவும் ரசித்துள்ளதாக பேசி வருகின்றனர். என்னதான் ஃபஹத் பாசில் ட்விட்டரில் இல்லை என்றாலும் தான் நடித்த ரத்னவேலு கதாபாத்திரம் ட்ரெண்டாவதை உணர்ந்து ஃபஹத் பாசில் தன் கவர் பிக்கை மாற்றியுள்ளார் என்றே தெரிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.