ரஜினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’படத்தின் டிரெய்லர் குறித்த அதிரடி அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் டிரெய்லர்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடத்துள்ள படம் ‘ஜெயிலர்’. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடந்தது. ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். இந்நிலையில் ‘ஜெயிலர்’ டிரெய்லர் குறித்த அதிரடி அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பட்டையை கிளப்பிய காவாலா’ஜெயிலர்’ படத்தின் முதல் அப்டேட்டாக ‘காவாலா’ பாடல் வெளியானது. அனிருத் இசையில் தமன்னாவின் துள்ளலான நடனத்தில் இந்தப்பாடல் வெளியானது. சூப்பர் ஸ்டார் படத்தின் முதல் அப்டேட்டாக தமன்னாவின் பாடல் வெளியானது ஒருசில நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘காவாலா’ பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் மாஸ் காட்டியது.
மாஸ் காட்டிய ஹுக்கும்இதனையடுத்து இரண்டாவது சிங்கிளாக ‘ஹுக்கும்’ பாடல் வெளியானது. ரஜினிகாகவே எழுதப்பட்ட மாஸ் வரிகளுடன் வெளியான இந்தப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ரஜினியின் தீவிர ரசிகரான சூப்பர் சுப்பு என்பவர் ‘ஹுக்கும்’ பாடலின் ஒவ்வொரு வரிகளையும் ரஜினிக்காகவே செதுக்கினார். சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான சர்ச்சைகளுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக வெளியாகி இந்தப்பாடல் இணையத்தில் பட்டையை கிளப்பியது.
ஜெயிலர் ஆடியோ லான்ச்இதனையடுத்து ‘ஜெயிலர்’ ஆடியோ லான்ச் கடந்த சனிக்கிழமை பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில், இந்தப்படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் மாஸான டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம், ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம். காத்திருந்தது போதும்’ என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற டார்க் காமெடி படங்களை இயக்கிய நெல்சன் தற்போது ‘ஜெயிலர்’ படத்தினை இயக்கியுள்ளார். தன்னுடைய முந்தைய படங்களை போல் அல்லாமல் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தப்படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். ‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.