நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்திருக்கிறார் தமன்னா. காவாலா பாடலில் ரஜினியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கிறார். அந்த பாடல் அனைவரையும் கவர்ந்துவிட்டது.
யாருடா சூப்பர் ஸ்டார் நெத்தியடி பதில் கொடுத்த ரஜினி
தமன்னாவை பார்த்தாலே காவாலா ஸ்டெப்ஸ் போடச் சொல்லி கேட்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் ஜெயிலர் பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னாவிடம் அவருக்கும், ரஜினிக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் பற்றி கேட்கப்பட்டது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ரஜினிக்கு 72 வயதாகிறது, தமன்னாவுக்கு 33 வயதாகிறது. மேலும் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தில் 67 வயதாகும் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் தமன்னா.
தன்னை விட அதிக வயது நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பது குறித்து தமன்னா கூறியதாவது, வயது வித்தியாசத்தை ஏன் பார்க்கிறீர்கள்?. திரையில் வரும் இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் பாருங்கள். 60 வயதிலும் அட்டகாசமாக ஸ்டண்ட்ஸ் செய்கிறார் டாம் க்ரூஸ். அந்த வயதிலும் நானும் குத்தாட்டம் போட விரும்புகிறேன் என்றார்.
ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவிருக்கும் ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அடுத்த வாரம் மட்டும் தமன்னா நடிப்பில் இரண்டு படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன.
ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் வருகிறார். மறுநாளே அதாவது ஆகஸ்ட் 11ம் தேதி போலா ஷங்கர் படம் ரிலீஸாகவிருக்கிறது. வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான அதில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
மேலும் ரஜினியின் ஜெயிலர் படம் தனியாக வரவில்லை. அதே நாளில் மலையாள ஜெயிலர் படமும் வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே ஜெயிலர் தலைப்பு தொடர்பாக இரு தரப்பும் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது.
இந்நிலையில் நடந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது அனைவரையும் கவர்ந்துவிட்டது. நெல்சன் திலீப்குமார் பற்றி ரஜினி கூறியதாவது,
Rajini:இருந்தாலும் நெல்சனுக்கு இம்புட்டு தைரியம் ஆகாது: ரஜினியை பார்த்து அந்த கேள்வியை கேட்டிருக்காரே!
ஜெயிலர் படத்தின் முதல் நாள் ஷூட்டிங். முதல் ஷாட் முடிந்த பிறகு என் அருகில் வந்து அமர்ந்தார் நெல்சன். அடுத்த சீன் பற்றி பேசப்போகிறார் என்று நினைத்தேன். சார் உங்க லவ் பத்தி சொல்லுங்க, எந்த ஹீரோயினை லவ் பண்ணீங்க என்றார்.
என்ன நெல்சன் என்று கேட்டேன். சும்மா சொல்லுங்க சார் என்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலுடன் வேலை செய்தபோது அவரிடம் இந்த கேள்வியை கேட்டீர்களா என்றதற்கு ஆமாம் சார் என்றார். கமல் சாரிடம் கேட்டதற்கு எல்லாத்தையும் சொன்னார் என்றார். ஆனால் நெல்சனிடம் சொன்னீர்களா என்று கமலுக்கு போன் செய்து கேட்க முடியாதே என்றார்.
ரஜினியை பார்த்து உங்க லவ் பத்தி சொல்லுங்கனு கேட்டிருக்கிறாரே இந்த நெல்சன், மனுஷனுக்கு ரொம்பக் தான் தைரியம் என்கிறார்கள் ரசிகர்கள். மேலும் சிலரோ, ரஜினி பதில் சொன்னாரா?. எந்த ஹீரோயினை லவ் பண்ணினாராம் என நெல்சன் திலீப்குமாரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
Kamal Haasan: உங்க லவ் பத்தி ரஜினியிடம் நெல்சன் சொன்னது உண்மையா ஆண்டவரே?
மேலும் சிலரோ, கமல் என்ன சொன்னார், அவர் யாரை லவ் பண்ணினார் என கேட்கிறார்கள். யார் எத்தனை முறை கேட்டாலும் நான் சொல்லவே மாட்டேனே என்று இருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.