Karthi: கார்த்திக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி: வேகமெடுக்கும் 'சர்தார் 2' பணிகள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் ‘சர்தார்’. கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வெளியான இந்தப்படம் 100 கோடி வரை வசூலித்திருன்தது. இந்நிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கார்த்தி தற்போது ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான இதில் வந்தியத்தேவனாக நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் நடித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகி வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக ‘ஜப்பான்’ படத்தை தயாரித்து வருகிறது. குக்கு, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற விமர்சனரீதியாக பெரும் வரவேற்பினை பெற்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் இந்தப்படத்தை இயக்குகிறார். தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் கார்த்தியின் 25 வது படமாக ‘ஜப்பான்’ உருவாகி வருகிறது.

இந்நிலையில் கார்த்தியின் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதன்படி பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்தாண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்ற ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி. ‘சர்தார்’ முதல் பாகத்தில் அப்பா, மகனாக இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

Captain Miller: தனுஷின் இந்த மனசு யாருக்கு வரும்.?: ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

உளவாளிகளின் வாழ்க்கை வரலாறு குறித்தும், தண்ணீர் மாபியா குறித்தும் இந்தப்படத்தில் பேசப்பட்டிருந்தது. இந்நிலையில் ‘சர்தார்’ இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாகவும், யுவன் ஷங்கர் ராஜா இசயமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ‘சர்தார்’ முதல் பாகத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் ‘சர்தார்’ இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தற்போது வேகமெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலலும், ’96’ பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் கார்த்தி நடிக்கவுள்ளார். இதனிடையில் கார்த்தியின் ‘ஜப்பான்’ படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொண்டாடப்படும் ‘மாமன்னன்’ ரத்னவேல் கதாபாத்திரம்.. மாரி செல்வராஜ் எச்சரிக்கை: வைரலாகும் ட்வீட்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.