சிட்னி,:’ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் சமீபத்தில் ஒதுங்கிய மர்ம பொருள், இந்திய ராக்கெட்டின் ஒரு பகுதி’ என, அந்த நாட்டின் விண்வெளி ஆய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஜூரியன் கடற்கரை அருகே கடந்த மாதம், 17ம் தேதி மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. உருளை வடிவில் இருந்த அந்தப் பொருள் எதனுடன் தொடர்புடையது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் இருந்த குறியீடுகள் உள்ளிட்டவை, இந்தியாவுடன் தொடர்புடையது என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு, ஆஸ்திரேலியா தகவல் அனுப்பியது.
இந்நிலையில், ‘கரை ஒதுங்கிய மர்ம பொருள், இந்தியாவின், பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் ஒரு பகுதி’ என, ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு மையம் தற்போது உறுதி செய்துள்ளது.
ஆனால், இது குறித்து இஸ்ரோ என்ற கருத்தையும் தெரிவிக்கவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement