புதுடில்லி, மோடி சமூகத்தினரை அவதுாறாக பேசிய வழக்கில், காங்., முன்னாள் தலைவர் ராகுல் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யும்படி, குஜராத் முன்னாள் அமைச்சர்பர்னேஷ் மோடி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலின் போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்த காங்., முன்னாள் தலைவர் ராகுல், குஜராத்தில் அதிகமாக வசிக்கும் மோடி சமூகத்தினர்குறித்து அவதுாறாக பேசினார்.
இது தொடர்பான வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால், ராகுலின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ராகுல் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, 4ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், குஜராத் முன்னாள் அமைச்சரும்,பா.ஜ., – எம்.எல்.ஏ.,வுமான பர்னேஷ் மோடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், ‘ராகுலின் அவதுாறு பேச்சால், மோடி சமூகத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களையும் அவர், அவதுாறாக பேசியுள்ளார். எனவே, அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement