Sikh riots case: Jagdish Tydler plea seeking anticipatory bail | சீக்கிய கலவர வழக்கு: முன் ஜாமின் கோரி ஜகதிஷ் டைட்லர் மனு

புதுடில்லி: சீக்கிய கலவர வழக்கில் சி.பி.ஐ., கைது நடவடிக்கையை தவிர்க்க ஜகதிஷ் டைட்லர் முன்ஜாமின் கோரியுள்ளார்

காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் இந்திரா, 1984ல் சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதைத் தொடர்ந்து, புதுடில்லி உட்பட நாட்டின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சரான ஜகதிஷ்டைட்லர் துாண்டுதலால் இந்த வன்முறை நடந்ததாக குற்றஞ்சாட்டப் பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக , சி.பி.ஐ., விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த ஜூலை 26-ம்
தேதி ஜகதிஷ் டைட்லருக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக.05-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டிருந்தது. கைதை தவிர்க்க முன்ஜாமின் கோரி டில்லி கோர்ட்டில் ஜகதிஷ் டைட்லர் மனு இன்று (ஆக்.02) விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.