Taapsee: டாப்ஸி இப்படியொரு பிசினஸ் பண்றார்னு உங்களுக்கு தெரியுமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் டாப்ஸி. அதன் பிறகு தெலுங்கு படங்களில் பிசியான அவர் தற்போது பாலிவுட் படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

யாருடா சூப்பர் ஸ்டார் நெத்தியடி பதில் கொடுத்த ரஜினி
டாப்ஸி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மும்பையில் சொந்தமாக வீடு வாங்கிவிட்டார். 30 வயதுக்குள் வீடு, பேங்க் பேலனஸ் என செட்டிலாகிவிட வேண்டும் என்பது டாப்ஸின் ஆசை. அந்த ஆசை நிறைவேறிவிட்டது.

பாலிவுட்டில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் டாப்ஸி. அவர் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பிற தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்.

தன் தங்கை ஷகுனுடன் சேர்ந்து திருமண ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். டாப்ஸி நிறுவனத்திடம் பணத்தை கொடுத்தால் திருமண வேலைகளை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். எல்லா ஏற்பாடுகளும் சரியாக நடக்கிறதா என்கிற டென்ஷன் இல்லாமல் மணமக்கள் வீட்டார் இருக்கலாம். மேலும் இவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

Jailer: 40 வயது மூத்தவரான ரஜினியுடன் நடிப்பதா?: தமன்னா சொன்ன சூப்பர் பதில்

இது தவிர்த்து கே.ஆர்.ஐ. என்டர்டெயின்மென்ட்டுடன் சேர்ந்து Pune 7 Aces எனும் பேட்மிண்டன் அணியின் உரிமையாளராக இருக்கிறார் டாப்ஸி. அந்த அணியின் பயிற்சியாளர் தான் டாப்ஸியின் காதலர் மதியாஸ் போ.

கம்ப்யூட்டர் என்ஜினியரான டாப்ஸி கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் செய்தார். படித்து முடித்து வேலை பார்த்த போது பட வாய்ப்புகள் வரவே என்ஜினியர் வேலைக்கு டாட்டா காட்டிவிட்டு கிளம்பிவிட்டார்.

முன்னதாக தெலுங்கு திரையுலகில் வேலை செய்தபோது டாப்ஸியை ராசியில்லாத நடிகை என்றார்கள். அது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது,

நான் ராசியில்லாதவள் என அனைவரும் தெரிவித்தார்கள். நான் நடித்த தெலுங்கு படங்கள் இரண்டு ஓடவில்லை என்பதால் நான் ராசியில்லாதவளாம். அந்த படங்களில் நடிக்கும் முன்பு ரொம்ப யோசிக்கவில்லை. நடிக்க வந்த புதிதில் எனக்கு எதுவும் தெரியாது.

பெரிய பெயர்களை பார்த்து படங்களை தேர்வு செய்தேன். ஆனால் அது எனக்கு சாதகமாக இல்லாமல் போய்விட்டது. நான் சினிமா பின்னணி இல்லாமல் வந்தவள். அதனால் என் தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டேன்.

மூன்று பாடல்கள் அல்லது 5 காட்சிகளில் வந்ததற்காக, படம் ஓடாதபோது என்னை குறை சொன்னது தான் எனக்கு புரியவில்லை. ஆனால் ஏன் என்னை குறை சொல்ல வேண்டும் என யோசித்திருக்கிறேன்.

அதன் பிறகு படத்தை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தினேன் என்றார்.

Meena: கமலுடன் முத்தக் காட்சி: கேரவனுக்கு ஓடிப் போய் அம்மாவிடம் அழுத மீனா

பாலிவுட்டின் பிசியான நடிகையாக இருக்கிறார் டாப்ஸி. கடந்த ஆண்டு மட்டும் அவர் நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸாகின. அடுத்தாக ராஜ்குமார் ஹிரானியின் Dunki படத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அந்த படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இது தவிர்த்து அவர் கையில் மூன்று இந்தி படங்கள் இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.