Upcoming cars and SUV this August 2023 – வரவிருக்கும் கார் மற்றும் எஸ்யூவிகள் ஆகஸ்ட் 2023

இந்திய சந்தையில் நடப்பு ஆகஸ்ட் 2023-ல் வரவிருக்கும் புதிய கார் மற்றும் எஸ்யூவிகள் உட்பட சில மேம்பட்ட கார்களை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இந்த வரிசையில் மஹிந்திரா பிக்கப் டிரக், எலக்ட்ரிக் தார் கான்செப்ட், டாடா பஞ்ச் டொயோட்டா ரூமியன் உட்பட பல்வேறு மாடல்கள் வரவுள்ளன.

இந்த மாதம் பிரீமியம் பேட்டரி எல்க்ட்ரிக் கார்களான ஆடி க்யூ8 இ-ட்ரான், வால்வோ சி40 ரீசார்ஜ் ஆகியவற்றுடன் ஜிஎல்சி எஸ்யூவி மாடலும் வரவுள்ளது.

punch icng

Tata Punch CNG

விரைவில் விலை அறிவிக்கப்பட உள்ள டாடா பஞ்ச் சிஎன்ஜி மாடல் தோற்ற அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மாடலை தழுவியதாக அமைந்திருக்கும்.  1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜினை கொண்டிருக்கும்.  இன்ஜின் பெட்ரோலுடன் 86hp மற்றும் 113Nm டார்க், CNG உடன் வரும்பொழுது, 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்படும்.

benz GLC

Mercedes-Benz GLC

வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்சி எஸ்யூவி காரில் GLC 300 பெட்ரோல் மற்றும் GLC 220d டீசல் என இரண்டிலும் வரவுள்ளது. விற்பனைக்கு வரும் பொழுது மெர்சிடிஸ் ஜிஎல்சி காரின் விலை ரூ.60 லட்சத்தில் துவங்கலாம்.

toyota rumion mpv india launch

Toyota Rumion

எர்டிகா காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக வரவிருக்கும் டொயோட்டா ரூமியன் ஏற்கனவே பல்வேறு வெளிநாடுகளில் மாருதி சுசூகி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு டொயோட்டா நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

1.5 லிட்டர் டூயல் ஜெட் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் வருவதால், 6000rpm-ல் 103 hp பவரையும், 4400rpm-ல் 136.8 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு கூடுதலாக, பேடல் ஷிஃப்டர்டன் புதிய 6-வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆக மாற்றப்பட்டுள்ளது.

mahindra new pikup

Mahindra Scorpio N Pikup

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா நிறுவனம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ஸ்கார்பியோ என் அடிப்படையில் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்ற மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப் டிரக்கினை வெளியிட உள்ளதை உறுதி செய்யும் வகையில் டீசரை வெளியிட்டுள்ளது.

thar 5 door soon

Mahindra Thar EV Concept

விற்பனையில் கிடைக்கின்ற தார் ஆஃப் ரோடர் அடிப்படையில் எலக்ட்ரிக் வெர்சனில் தார் இவி கான்செப்ட் மாடலை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக மஹிந்திரா நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

2023 hyundai creta suv

Hyundai Creta, Alcazar Adventure Edition

பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அட்வென்சர் சார்ந்த கூடுதலான சில ஸ்டைலிங் அம்சங்களை பெற்ற கிரெட்டா மற்றும் 7 இருக்கை அல்கசார் காரில் என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் சிறப்பு எடிசன் விற்பனைக்கு வரக்கூடும்.

q8 etron

Audi Q8 e-Tron

ஆடம்பர வசதிகளை பெற்ற சொகுசு எலக்ட்ரிக் கார் மாடலான ஆடி Q8 e-tron ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஸ்போர்ட்பேக் ஃபேஸ்லிஃப்ட் என இரண்டிலும் பொதுவாக பொருத்தப்பட்டுள்ள 114Kwh சிங்கிள் சார்ஜில் ஸ்போர்ட்பேக் மாடலில் அதிகபட்சமாக 600 கிமீ ரேஞ்சு வழங்கலாம். மற்ற மாடலில் 582 கிமீ வழங்கும். பொதுவாக இரண்டும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற உள்ளது.

volvo c40 recharge suv

Volvo C40 Recharge

இந்தியாவில் இரண்டாவது எலகட்ரிக் காரை வெளியிட தயாராகியுள்ள வால்வோ நிறுவனம் சி40 ரீசார்ஜ் எஸ்யூவி காரில் இரட்டை மோட்டார் அமைப்பினை பெற்று 408hp பவர் மற்றும் 660Nm டார்க் வெளிப்படுத்தக்கூடிய 78kWh பேட்டரி பேக் கொண்டு அதிகபட்சமாக 530km (WLTP) ரேஞ்சு வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

citroen c3 aircross front

Citroen C3 Aircross

108 hp பவரை வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் ட்ர்போ என்ஜினை பெற உள்ள சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் முன்பதிவு செப்டம்பர் மாதம் துவங்கப்பட உள்ளதால் விலை ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பரில் அறிவிக்கப்படலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.