'கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால் விளைவு மிக மோசமாயிருக்கும்'.. ராஜ்கிரண் எச்சரிக்கை!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ராஜ்கிரண். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்களின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். ஹீரோ முதல் குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் வரை பட்டையை கிளப்பி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ராஜ்கிரணின் ஃபேஸ்புக் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஷேர் செய்துள்ள பதிவில், இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளைபிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ, அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும் “இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்”, பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால் பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம் என்றும் நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தப்பொறுமையை தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால் அதன் விளைவு மிக மோசமாயிருக்கும் என்றும் நடிகர் ராஜ்கிரண் எச்சரித்துள்ளார். மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பர்ட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறியிருந்தார்.

சீமானின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவலான ஜவாஹிருல்லா, சீமான் தனது அநாகரீகமான இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நடிகர் ராஜ் கிரணின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைதான் இப்படி மறைமுகமாக எச்சரித்துள்ளார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.