சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும். சில இடங்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 82 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.