திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செய்யப்பட்டுள்ள மாற்றத்திற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பதி பக்தர்கள்உலக பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். திருப்பதி கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள்தோறும் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.பாரம்பரிய உண்டியல்
இதேபோல் நாள்தோறும் செலுத்தப்படும் காணிக்கையும் 5 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது. விசேஷ நாட்களில் ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாயை கூட தாண்டுகிறது. வெளி நாட்டு பக்தர்களும் திருப்பதி ஏழுமலையானுக்கு தாராளமாக காணிக்கை வழங்கி வருகின்றனர். ஏழுமலையானுக்கு காணிக்கை பெற பெரிய பெரிய பித்தளை அண்டாக்கள் வைக்கப்பட்டு சுற்றிலும் வெள்ளை நிற துணியை கட்டி வைத்து உண்டியலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய உண்டியல்
இந்த உண்டியல்கள் வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நிரம்பி விடும். பின்னர் அதனை எடுத்துவிட்டு புதிய உண்டியல்களை வைப்பது வழக்கம். நிரம்பிய உண்டியலில் சிலர் பணத்தை போடுவது போல் திருடுவதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் புதிய உண்டியல் மாடல்களை அறிமுகம் செய்துள்ள திருப்பதி தேவஸ்தானம்.
5 உண்டியல்கள்
அதன்படி தற்போது சில்வர் உலோகத்தால் செய்யப்பட்ட புதிய மாடலினால் ஆன 5 உண்டியல்கள் ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த புதிய மாடல் உண்டியலில் 3 பக்கமும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இந்த உண்டியலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக நகர்த்தி செல்லும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.
திருட முடியாதுமேலும் உண்டியலுக்குள் கையை விட்டு பணத்தை திருட முடியாத அளவுக்கு இரும்பு கம்பிகளும் பொருத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக கோவில் வளாகத்தில் 5 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் மத்தியில் இந்த உண்டியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த மாடல் உண்டியலை மேலும் அதிகரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.கீழே விழுந்த உண்டியல்
இந்த புதிய மாடல் உண்டியல்களின் வருகையால் காலங்காலமாய் பயன்பாட்டில் வைத்திருந்த பழைய உண்டியல்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் விடை கொடுக்கிறது. கடந்த ஜூலை மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலைக் கணக்கிட எடுத்து செல்லும் போது தவறி கீழே விழுந்து. இதனால் உண்டியல் உடைந்து அதிலிருந்த சில்லறைகள் தரையில் சிதறின.
சிதறிய சில்லறைகள்திருப்பதி ஏழுமலையானுக்குப் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தும் பணம், நகைகள் கோவிலுக்கு வெளியே உள்ள பரக்காமணி மண்டபத்தில் வைத்து கணக்கிடப்படும். அப்படி உண்டியல் பணத்தை கணக்கிடுவதற்காக கடந்த மாதம் கொண்டு செல்லப்பட்டப்போது உண்டியல் எதிர்பாரதவிதமாக கீழே விழுந்து கோவில் வாசலில் சில்லறைகள் சிதறின. இதையடுத்து ஊழியர்கள் அதனை மீண்டும் எடுத்து கணக்கிட கொண்டு சென்றனர்.
திருப்பதி லட்டு: நந்தினி போட்ட ஒரே போடு… தூக்கியடித்த தேவஸ்தானம்… தட்டி தூக்கிய அமுல்… பரபரப்பு தகவல்!உண்டியல் மாற்ற காரணம்
இந்த சம்பவமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பாரம்பரிய உண்டியல் மாற்றப்படுவதற்கு காரணம் என கூறப்படுகிறது. சமீபத்தில்தான் கூட்ட நெரிசல் மிக்க காலங்களில் பக்தர்கள் தங்கும் வசதிக்காக கண்டெய்னர் ரூம்களை அறிமுகம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் உண்டியலும் நவீன காலத்திற்குகேற்ப மாறி வருவது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருக்குள சேவை ரத்துஇதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள புஷ்கரணி திருக்குளத்தில் பராமரிப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக இந்த மாதம் முழுவதும் பக்தர்கள் திருக்குளத்தில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்குளத்திற்கு தினமும் நடத்தப்படும் புஷ்கரணி ஆரத்தி சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருக்குளம் பராமரிக்கப்படுவது வழக்கம்.
நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் போட்டோ… அதிர்ச்சியில் ரசிகர்கள்!பராமரிப்பு பணி
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருக்குள பராமரிப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதற்காக குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு குளம் சுத்தம் செய்யப்பட்ட பின் மீண்டும் தண்ணீர் விட்டு நிரப்பப்படும். இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு அடுத்த மாதம் முதல் மீண்டும் திருக்குளத்தில் புஷ்கரணி சேவை தொடங்கும் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.