தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் மீண்டும் இயக்கத்துக்கு திரும்பியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கியிருந்தார் தனுஷ். ராஜ்கிரண், ரேவதி நடிப்பில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப்படத்திற்கு பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த தனுஷ் தனது 50 வது தானே இயக்கி நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கவுள்ள ‘D50’ படத்திற்கு ராயன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன் இருவரும் இந்தப்படத்தில் தனுஷின் சகோதர்களாக நடிக்கின்றனர். நடிகை அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன் ஜோடியாக நடிக்கிறார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மேலும் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் படமாக ‘D50’ உருவாகயிருப்பதாக கூறப்படுகிறது. ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக நீண்ட தலைமுடி, தாடி என மிரட்டலான லுக்கில் வலம் வந்த தனுஷ் தற்போது தான் இயக்க போகும் படத்திற்காக மொட்டை அடித்துள்ளார். அதே லுக்கில் இந்தப்படத்தில் நடிக்கவும் உள்ளார்.
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக அணிகா சுரேந்திரன் ‘D50’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்தவர். குட்டி நயன்தாரா என அழைக்கப்படும் அனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். ‘D50’ படத்தை பல நட்சத்திரங்களுடன் வேறலெவல் பிளானுடன் தனுஷ் இயக்கி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
Kavin: பிக்பாஸ் கவினுக்கு ‘டும் டும் டும்’: மணப்பெண் யார் தெரியுமா.?
தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ராக்கி, சாணிக்காயிதம் போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
அண்மையில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ பட டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்தப்படத்தில் தனுஷ் இலங்கையை சார்ந்த போராளியாக நடித்துள்ளதாகவும், இரண்டு பாகங்களாக ‘கேப்டன் மில்லர்’ வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘கேப்டன் மில்லர்’ படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Jailer: தலைவர் தரிசனம்.. தெறிக்க போகும் முத்துவேல் பாண்டியன் என்ட்ரி: மாஸ் அப்டேட்.!