Former US President Trump indicted by grand jury over efforts to overturn 2020 elections | அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: 2020 ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்காவை ஏமாற்றும் நோக்கில் சதி செய்தல், அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு இடையூற செய்தல், அதிகாரப்பூர் நடவடிக்கைகளை தடுக்க சதி செய்தல், அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட உரிமைகளை ஒருவர் நிறைவேற்ற முயற்சி செய்வதை தடுக்க சதி செய்தல் என 4 பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், ஜோ பைடனுக்கு கிடைக்கவிருந்த ஓட்டுகளை தனதாக்கி கொள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க ஒரு வார காலம் இந்த சதிக்கான திட்டம் தீட்டப்பட்டதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

டிரம்ப்புடன் சேர்ந்து சதி செய்ததாக பெயர் வெளியிடப்படாத 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவாகவில்லை.

இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 2024 தேர்தல் பிரசாரத்திற்கு நான் செல்வதை தடுக்கும் விதமாக தீய எண்ணத்துடன் முயற்சி நடக்கிறது என தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.