ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் X440 பைக்கின் விலை ரூ.10,500 உயர்த்தப்பட்டு தற்பொழுது ஆரம்ப விலை ரூ.2,39,500 முதல் துவங்கி ரூ.2,79,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. முன்பாக ரூ.2.29 லட்சம் முதல் ரூ.2.69 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மட்டுமே ஆன்லைன் புக்கிங் நடைபெற உள்ள நிலையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் முன்பதிவு நிறுத்தப்பட உள்ளது. இந்நிலையில் எக்ஸ்440 விலை உயர்வு ஆகஸ்ட் 4 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
Harley-Davidson X440 Price hiked
வரும் செப்டம்பர் மாதம் முதல் டீலர்களிடம் டெஸ்ட் டிரைவ் பைக்குகள் கிடைக்கும் எனவும், அக்டோபர் மாதம் முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஹார்லி 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.ஹார்லி எக்ஸ் 440 தோராயமான தமிழ்நாடு ஆன்-ரோடு விலை
X440 Denim ₹. 2,73,656 லட்சம்
X440 Vivid ₹. 307,540 லட்சம்
X440 S ₹. 3,37,645 லட்சம்
X440 ஆனது மெட்டாலிக் திக் ரெட், மஸ்டர்டு டெனிம், மேட் பிளாக் மற்றும் மெட்டாலிக் டார்க் சில்வர் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, மீட்டியோர் 350, ஜாவா 350, ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 மற்றும் ட்ரையம்ப் 400cc ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.