திருநெல்வேலி: சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று நடைபெற்ற திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில், திருநெல்வேலியில் அலங்கார வளைவு முதல் குறுக்குத்துறை சாலை வரையிலான இணைப்பு சாலைக்கு தமிழறிஞர் நெல்லை கண்ணன் பெயர் சூட்டி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்திலேயே இந்த தீர்மானம் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சில மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அனைத்து மாவட்ட உறுப்பினர்களிடமும் விவாதம் நடத்தி கருத்து […]