ஸ்டாலின் போட்ட உத்தரவு – உடனே கூட்டத்தை கூட்டிய சிவ்தாஸ் மீனா: இந்த முறை அந்த தப்பு நடக்காதாம்!

தமிழ்நாட்டுக்கு மழையை தரும் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் முக்கிய துறைகளின் அதிகாரிகளை அழைத்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தியுள்ளார்.

முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்ற பின்னர் பல்வேறு சவால்கள் மு.க.ஸ்டாலினுக்கு காத்திருந்தன. கொரோனா ஒரு பக்கம் என்றால் கனமழை வெள்ளம் ஒரு பக்கம். கடந்த ஆட்சிக்காலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ளாததாலே வெள்ளத்துக்கு காரணம் என்று திமுக அரசு குற்றம் சாட்டியது. அதுமட்டுமல்லாமல் மீட்பு பணிகளை விரைவாக மேற்கொண்டதால் விமர்சனங்களிலிருந்து தப்பியது.

அடுத்தமுறை இந்த பிரச்சினை

மீண்டும் வந்தால் திமுக அரசு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் என்பதால் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் வேகப்படுத்தப்பட்டன. சென்னையைச் சுற்றி சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் நீளத்துக்கு ஒவ்வொரு தெருவிலும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வந்தன. ஆரம்பத்தில் வேகமாக நடைபெற்ற பணிகள் பின்னர் மந்தகதியில் நடந்தன.

இதனால் கடந்த பருவமழையின் போது பாதி பணிகள் முடிக்கப்பட்டு, மீதி பணிகள் முடிக்கப்படாமல் இருந்தன. மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட குழிகளால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் பதிவாகின.

இந்த ஆண்டு மழை நீர் வடிகால் பணிகள் பருவமழை தொடங்கும் முன்னர் முடிக்கப்பட்டு வெள்ளமோ, தேவையற்ற விபத்துக்களோ ஏற்படக்கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் கவனமாக இருக்கிறார். திமுக அரசின் ஒவ்வொரு அசைவையும் எதிர்கட்சிகள் கண்காணித்து வருவதால் விமர்சனங்களுக்கு வாய்ப்பளித்து விடக்கூடாது என்பதால் தலைமைச் செயலாளரை அழைத்து இதுகுறித்து முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தாராம்.

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் செய்தியாளர்களை வெளியேற சொன்ன மேயர்

அதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கிய துறைகளின் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை, சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம், சென்னை மெட்ரோ உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி, கடலூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை பருவமழை தொடங்கும் முன் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.