Ajith Kumar:இது தான் உண்மையான விடாமுயற்சி: அஜித் செய்த காரியத்தை பாராட்டும் ரசிகர்கள்

Vidaa Muyarchi update: விடாமுயற்சி அப்டேட்டை எதிர்பார்த்த அஜித் குமார் ரசிகர்களுக்கு வேறு ஒரு அப்டேட் கிடைத்திருக்கிறது.

​விடாமுயற்சி​மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படம் குறித்து ஏதாவது அப்டேட் வராதா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் பைக் டூர் சென்றிருந்த அஜித் சென்னை திரும்பினார். அவர் திரும்பி வந்த கையோடு விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்குகிறார் மகிழ்திருமேனி என்றார்கள். ஆனால் படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தான் துவங்குவாராம். இதையடுத்து அஜித் மீண்டும் பைக் டூர் கிளம்பிவிட்டார்.ரஜினி​சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்ணா கேட்டு வாங்குங்க கொதித்த ரஜினி ரசிகர்​​பைக் டூர்​விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்க ஒரு மாத காலம் இருப்பதால் தன் உலக டூரில் ஒரு பகுதியை முடித்துவிடலாம் என கிளம்பிவிட்டார் அஜித் குமார். இம்முறை அவர் ஜெர்மனி, டென்மார்க், நார்வேயில் பைக்கில் டூர் செல்கிறார் என அஜித்தின் புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் ஷாலினி. அதை பார்த்த ரசிகர்களோ, இதுவும் விடாமுயற்சியே என்கிறார்கள்.
ஜெர்மனி​View this post on InstagramA post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)​​ஆசை​பைக்கில் உலகை சுற்றி வர வேண்டும் என்பது அஜித் குமாரின் ஆசை. ஒரே கட்டமாக அதை செய்ய முடியாது என்பதால் நேரம் கிடைக்கும்போது எல்லாம் பைக்கை எடுத்துக் கொண்டு சென்றுவிடுகிறார். ஒரு ஆசையை நிறைவேற்ற அஜித் குமார் செய்து வரும் இந்த காரியம் தான் உண்மையான விடாமுயற்சி என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
​செல்ஃபி​அஜித் குமார் ரைடிங் கியரில் எடுத்த செல்ஃபியையும் சமூக வலைதளத்தில் போஸ்ட் செய்திருக்கிறார் ஷாலினி. விடாமுயற்சி படப்பிடிப்பு தள்ளிப் போன வருத்தம் இருந்தாலும் அஜித்தை இப்படி பார்த்ததும் ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள். பார்த்து பத்திரமாக டூர் போயிட்டு வாங்க ஏ.கே. திரும்பி வந்ததும் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

​தமன்னா​Jailer: 40 வயது மூத்தவரான ரஜினியுடன் நடிப்பதா?: தமன்னா சொன்ன சூப்பர் பதில்விடாமுயற்சி படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் த்ரிஷாவுக்கு பதில் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வீரம் படத்தை அடுத்து மீண்டும் அஜித் குமார் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

​ரசிகர்கள் கோரிக்கை​அஜித் குமார் போகும் போக்கை பார்த்தால் முழுநேரம் ரைடராகிவிடுவார் போன்று. அவரை தொடர்ந்து பெரிய திரையில் பார்க்க விரும்புகிறோம். அவர் படங்களில் நடிப்பதை மட்டும் நிறுத்திவிடவே கூடாது. படங்களில் நடித்துக் கொண்டே உலக டூர் போய்க் கொண்டே இருக்கட்டும். அது தான் எங்களுக்கு வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.

​சாலையோரம் இறந்து கிடந்த கமல் பட நடிகர்: கடனால் தற்கொலை செய்த தேசிய விருது வென்ற பிரபலம்

​கொண்டாட்டம்​அஜித் வெளிநாட்டில் இருக்கும் இந்த நேரத்தில் அவரின் ரசிகர்கள் இன்று கொண்டாட்ட மூடில் இருக்கிறார்கள். அஜித் குமார் நடிக்க வந்து 31 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று கூறி #31YearsOfAjithKumar என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்து வருகிறார்கள். அஜித்தின் பட வீடியோக்களை ஷேர் செய்து ஏ.கே. பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மகிழ்ச்சி​​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.