புதுச்சேரி: ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் ரூ.6.31 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி ரூ.6.31 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் 80 நபர்களுக்கு தலா ரூ.2.50 லட்சம் வீதம் ரூ.2 கோடி உதவித் தொகையும், 789 பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.4.31 கோடி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா, செயலர் கேசவன், துறை இயக்குநர் இளங்கோவன், முதுநிலை கணக்கு அதிகாரி நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பலத்த சோதனை
சட்டசபைக்கு பொதுமக்கள் வந்து செல்ல சபாநாயகர் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை பார்க்க சட்டசபைக்கு வருவோர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதனையொட்டி நேற்று நலத்திட்ட உதவிகள் பெற வந்த பயனாளிகள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். பயனாளிகள் கூட்டதால் சட்டசபை நேற்று நிரம்பி வழிந்தது. நீண்ட வரிசையில் நின்று மாணவர்கள் கல்வித் தொகை பெற்று சென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement