பெங்களூரு : ‘காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறித்து பா.ஜ., முன்னாள் அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்த கருத்துக்கு, மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
‘கஸ்துாரி ரங்கன் அறிக்கையை அமல்படுத்த முடியாது’ என்று வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா முழுதும் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் அரக ஞானேந்திரா, மல்லிகார்ஜுன கார்கேயின் நிறத்தை குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ், ‘எக்ஸ்’சில் குறிப்பிட்டுள்ளதாவது:
தோலின் நிறத்தை இழிவுபடுத்துவது, கார்கேவை அவமானப்படுத்துவது மட்டுமல்ல, கார்கே என்ற பெயரில் ஒட்டுமொத்த பழங்குடியின தலித்களையும் அவமதிக்கும் செயலாகும்.
உலகளவில் நிற வேறுபாட்டை அகற்றும் இயக்கங்கள் உள்ளன. மேற்கத்திய நாடுகளில் நிறம், உடல் வடிவம் பற்றி அவமதிப்பது ஒரு பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் பா.ஜ.,வினர், தலித்களை இழிவுபடுத்துவதுடன், நிறத்தையும், தோற்றத்தையும் இழிவுபடுத்துகின்றனர். தலித்கள் மீது பா.ஜ.,வுக்கு மதிப்பு இருந்தால், அரக ஞானேந்திராவை உடனடியாக கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும். மல்லிகார்ஜுன கார்கே, தலித்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில்குறிப்பிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement