அஜித், விஜய் பட நடிகையின் தொழில் அதிபர் கணவரின் சொத்துமதிப்பு ரூ. 1,300 கோடிப்பு

ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் மூலம் பிரபலமானவர் அசின். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக அசின் நடித்த கஜினி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்ணா கேட்டு வாங்குங்க கொதித்த ரஜினி ரசிகர்
அந்த படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் அசின். இந்தி கஜினியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கானுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன் பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்தத் துவங்கினார் அசின். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் நட்பு கிடைத்தது. அவர் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை அசினுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அசின், ராகுல் சர்மா இடையே காதல் ஏற்பட்டு கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு அரின் என்கிற மகள் இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் அசின். இந்நிலையில் அவர் கணவர் ராகுல் சர்மாவின் சொத்துமதிப்பு ரூ. 1, 300 கோடி என்பது பற்றி தற்போது பேசப்படுகிறது.

தன் நண்பர்கள் ராஜேஷ் அகர்வால், விகாஸ் ஜெயின், சுமீத் அரோரா ஆகியோருடன் சேர்ந்து மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை கடந்த 2000ம் ஆண்டு துவங்கினார் ராகுல் சர்மா.

கடந்த 2017ம் ஆண்டு ராகுல் சர்மாவின் சொத்துமதிப்பு ரூ. 1,300 கோடி என ஃபோர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது. தற்போது அவரின் சொத்துமதிப்பு கண்டிப்பாக அதிகமாக இருக்கும்.

அசினும், ராகுல் சர்மாவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். தன் செல்ல மகள் அரினின் புகைப்படத்தை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் அசின். இந்நிலையில் அசினும், ராகுல் சர்மாவும் விவாகரத்து பெறப் போவதாக அண்மையில் தகவல் வெளியாகி தீயாக பரவியது.

Rajinikanth: சூப்பர் ஸ்டார், தளபதிக்கு எல்லாம் மேலே ஒருவர் இருக்கார், அவர் தான்…: ரோபோ சங்கர்

இன்ஸ்டாகிராமில் இருந்து திருமண புகைப்படங்கள், ராகுலின் புகைப்படங்களை நீக்கினார் அசின். அதை பார்த்தவர்களோ அசினும், ராகுல் சர்மாவும் விவாகரத்து பெறுகிறார்கள். அதனால் தான் அசின் இப்படி செய்திருக்கிறார் என பேசத் துவங்கினார்கள்.

இதை பார்த்த அசினோ, நானும், ராகுலும் வெளிநாட்டுக்கு வெகேஷனுக்கு வந்த நேரத்தில் விவாகரத்து பேச்சா என கேட்டார். மேலும் தனக்கும், ராகுல் சர்மாவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்.

முன்னதாக இந்தி கஜினி படத்தை பார்த்தபோது அசின் மாதிரி ஒரு பெண் நம் வீட்டிற்கு வந்தால் நன்றாக இருக்குமே என ராகுல் சர்மாவிடம் அவரின் குடும்பத்தார் தெரிவித்தார்கள். ராகுலோ அசினையே திருமணம் செய்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அசின் ஒரு நல்ல நடிகை. அவர் மீண்டும் நடிக்க வர வேண்டும். மகள் தான் வளர்ந்துவிட்டாரே அசின். தயவு செய்து மீண்டும் படங்களில் நடிக்க வாங்க என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கை நிறைவேறுவது கடினம் தான் போன்று.

அசினும், ராகுல் சர்மாவும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பர்சனலாகவே வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.