இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எவ்வித இடமுமில்லை எனவும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவி புரியும் எந்தவிதமான செயல்கள் தொடர்பாக இருக்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
அமைச்சர், துருக்கி நாட்டுக்கான சுற்றுப் பயணத்தின் போது துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் யாஸர் குலரை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் தென்னகோன் மற்றும் அமைச்சர் குலர் இடையே பல்வேறு கட்டங்களில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரித்தல் மற்றும் இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் தொடர்பை விருத்தி செய்வதற்காக ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது துருக்கியின் இலங்கைக்கான தூதுவர், இலங்கை கடற்படையின் உதவி பதவிநிலைத் தலைவர் மற்றும் துருக்கியின் பாதுகாப்பு அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.