ஐஆர்சிடிசி துர்கா பூஜையை முன்னிட்டு ஸ்பெஷல் பேக்கேஜ் ஆஃபரை அறிவித்துள்ளது.
ஐஆர்சிடிசிஇந்தியன் இரயில்வே IRCTC தளம் அவ்வப்போது பயணிகளை கவரும் வகையில் டூர் பேக்கேஜ்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஐஆர்சிடியின் டூர் பேக்கேஜ் ஒன்று மக்களின் கவனத்தை பெற்று வருகிறது. அதாவது வரும் துர்கா பூஜையை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் டூர் பேக்கேஜ்ஜை அறிவித்துள்ளது ஐஆர்சிடிசி.துர்கா பூஜை ஆஃபர்இந்த துர்கா பூஜையை வடமாநிலங்களில் கொண்டாட விரும்புபவர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு வரப்பிரசாதம்தான். இந்த துர்கா பூஜை ஸ்பெஷல் பேக்கேஜ்ஜாக டார்ஜிலிங் மற்றும் டோர்ஸ் ஆகிய இடங்களுக்கு இரண்டு சிறப்புப் பயணங்களை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இந்த இரண்டு பயணங்களும் அக்டோபர் 21 ஆம் தேதி சப்தமி அன்று சீல்டா நிலையத்திலிருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸுக்கு குட் நியூஸ்… உச்சநீதிமன்ற தீர்ப்பால் நிம்மதி!கட்டணம் எவ்வளவு?
பேக்கேஜை முன்பதிவு செய்பவர்களுக்கு ஏசி 3-டையர் பெட்டிகளில் டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பயணங்களும் ஆறு பகல் மற்றும் ஐந்து இரவுகளாக இருக்கும் என்றும் டார்ஜிலிங் பயணத்திற்கு ஒரு நபருக்கு 21,100 ரூபாய் கட்டணம் என்றும் டோர்ஸ் பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ.18,850 கெட்டணம் என்று ஐஆர்சிடிசி அதிகாரி திபாங்கர் மன்னா தெரிவித்துள்ளார்.
என்னென்ன சேவைகள்?
இந்த பேக்கேஜ் கட்டணத்தில் ரயில் டிக்கெட், உணவு மற்றும் தங்குமிடம் உட்பட அனைத்து செலவுகளும் அடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பேக்கேஜ்ஜை பெறும் சுற்றுலாப் பயணிகள் டீலக்ஸ் ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் சுற்றிப் பார்க்க கார்கள் வழங்கப்படும் என்று மன்னா கூறியுள்ளார்.
சிறப்பு பெங்காலி தாலி
மேலும் இந்த ஒவ்வொரு பயணத்திற்கும், 30 இருக்கைகள் உள்ளன என்றும் டோர்ஸ் பயணம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும், ஏனெனில் பயணிகளுக்கு சிறப்பு பெங்காலி தாலி உணவு வழங்கப்படும் என்றும் கூறினார். இரண்டு பயணங்களும் ஆஃப்பீட் இடங்களை உள்ளடக்கும் என்றும் திபாங்கர் மன்னா தெரிவித்துள்ளார்.
டார்ஜிலிங் மற்றும் டோர்ஸ்டிக்கெட் முன்பதிவு பகுப்பாய்வின்படி, தங்கள் பூஜை விடுமுறையைத் திட்டமிடும் பயணிகளின் பட்டியலில் டார்ஜிலிங் மற்றும் டோர்ஸ் போன்ற வடக்கு வங்காள இடங்கள் அதிகம் உள்ளன என்பதால் ஐஆர்சிடிசி இப்படி ஒரு ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த பகுதிகளில் பதாடிக் எக்ஸ்பிரஸ், டார்ஜிலிங் மெயில், ஹவுரா-நியூ ஜல்பைகுரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், டீஸ்டா டோர்சா எக்ஸ்பிரஸ் மற்றும் உத்தர் பங்கா எக்ஸ்பிரஸ் ஆகியவை மிகவும் பிரபலமான ரயில்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்செட் ஆக்கிய KSRTC.. அதிரடி காட்டும் கொச்சி மெட்ரோ… தனியார் பஸ்களுடன் கைகோர்க்க திட்டம்!