மெக்சிகோ சிட்டி: மேற்கு மெக்சிகோவில் பயணிகள் பஸ் ஒன்று அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 42 பயணிகள் இருந்தனர். நெடுஞ்சாலையில் பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டு இருந்தபோது பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 20பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement