வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: தனது சுயமரியாதையில் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை என கூறி ரோஹித் தியோ என்ற மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி , திறந்த வெளி நீதிமன்றம் முன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, இந்நீதிமன்றத்தில் எனது சுயமரியாதைக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது, அதற்காக எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்பவில்லை. உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்றே எனது பதவியை ராஜினாமா செய்து அதன் கடிதத்தை கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பிவிட்டேன் என உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
ராஜினாமா பின்னணி
நீதிபதியின் இந்த பரபரப்பு பேட்டி குறித்த பின்னணி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், நாக்பூர்-மும்பை சம்ருத்தி எக்ஸ்பிரஸ் சாலை , ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஜனவரியில் மஹாராஷ்டிரா அரசு கொண்டு வந்த தீர்மானமத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இதே நீதிபதி ரோஹித் தியோ முன்பாக கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இதில் மஹாராஷ்டிரா அரசுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்தார். இதனால் நீதிபதி ரோஹித் தியோவை பழிவாங்கிட மஹாராஷ்டிரா அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நீதிபதிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுதன் காரணமாக ரோஹித் தியோ பதவி விலகுவதாக பகிரங்கமாக பேட்டியளித்தன் பின்னணி தெரியவந்தது.
மற்றொரு காரணம்
டில்லி பல்கலை., முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா, நக்சலைட் அமைப்புடனான தொடர்பு குறித்த வழக்கில், 2014ல் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றார். இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் நடந்த அப்பீல் வழக்கை இதே நீதிபதி ரோஹித் தியோ, அனில் பன்சால் ஆகியோர் விசாரித்து 2022 அக்டோபரில் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
விடுதலையை எதிர்த்து, மஹாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பேலா திரிவேதி அமர்வு விசாரித்தது. நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ரோஹித் தியோ, அனில்பன்சால் பிறப்பித்த தீர்ப்பை நிறுத்தி வைத்து பேராசிரியர் ஜி. என். சாய்பாபா தொடர்ந்து சிறையில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement