வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காங்., முன்னாள் தலைவர் ராகுல் மீதான அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் எம்.பி., பதவி தகுதி நீக்கம் என்ற விஷயம் ஒன்றும் இல்லாமல் போய் விடும். மேலும் வரும் காலங்களில் பார்லி.,க்கு செல்ல முடியும் என்ற நிம்மதி ராகுலுக்கு கிடைத்துள்ளது.
மோடி என்னும் ஜாதி குறித்து அவதூறாக பேசியதால் குஜராத் கோர்ட் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதனால் அவர், எம்பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் தரப்பில் மனு தாக்கலானது.
இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.காவி, பி.எஸ். நரசிம்மா, சஞ்சய்குமார் ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்தது.
கொலையோ, கொள்ளையோ அல்ல !
சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விவாதத்தில் ராகுல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடுகையில் ; ராகுல் மீதான வழக்குள் அனைத்தும் பா.ஜ.,வினரால் தான் தொடுக்ப்பட்டுள்ளது. அடிப்படையில் இது தவறான வழக்கு. எந்த வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை. ராகுல் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் தற்போது கடைசி கட்டத்தில் இருக்கிறார். ராகுல் கடந்த 2 பார்லி., கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. அவர் மீதான விசாரணை அனைத்தும் முடிந்து விட்டது. உரிய ஆதாரங்கள் ஏதுமில்லை.
மோடி என்னும் ஜாதி குறித்து ராகுல் பேசவில்லை. மோடி என்ற பெயரை மட்டுமே குறைகூறினார். ராகுல் மீது கொலையோ, கொள்ளையோ, பலாத்காரமோ என்ற பெரிய கிரிமினல் குற்றச்சாட்டு ஏதும் வைக்கப்படவில்லை. ஜாமினில் வரக்கூடிய குற்றமே ! அவதூறு வழக்கு மட்டுமே இவ்வாறு அபிஷே க் சிங்வி வாதிட்டார்.
இந்நேரத்தில் குறுக்கிட்ட நீதிபதிகள்:
ராகுலுக்கு அதிகப்பட்ச தண்டனை கொடுக்கப்பட்டது ஏன் ? ஒரு அவதூறு வழக்கில் தண்டிக்கப்படுவதால் இவரது உரிமை பாதிக்கப்படுவதை விட ஒட்டு மொத்த தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படாதா ?
உரிய காரணங்கள் இல்லை !
இதற்கு மனுதாரர் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் ஒரு அவதூறு வழக்கிற்காக 8 ஆண்டுகள் அவர் குரல் கொடுக்காமல் இருக்க வேண்டுமா ? இவ்வாறு கேள்வி எழுப்பினர். ஒரு நாள் குறைவாக தண்டனை கொடுத்திருந்தால் ராகுல் தப்பி இருப்பார்.
அதிகபட்ச தண்டனையை அறிவிக்கும் போது கீழ் கோர்ட்டுகள் உரிய காரணங்கள், ஆதாரங்கள் சொல்ல வேண்டும். 100 பக்கங்களில் தீர்ப்பு அளித்த கோர்ட் , காரணங்களை சொல்ல தவறி விட்டது. என்றும் கூறி 2 ஆண்டு சிறைத்தண்டனையை நீதிபதிகள் நிறுத்தி வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement