Kamal Haasan: கமல் மகள்கள் செய்ததை ரஜினி மகள்கள் செய்யல

Aishwarya Rajinikanth: ஸ்ருதி ஹாசனும், அக்ஷரா ஹாசனும் செய்ததை ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், சவுந்தர்யாவும் செய்யவில்லை.

​வாரிசுகள்​அஜித், விஜய் பட நடிகையின் தொழில் அதிபர் கணவரின் சொத்துமதிப்பு ரூ. 1,300 கோடிப்புதிரையுலகில் வாரிசுகள் வருபவது புது விஷயம் இல்லை. அப்பா, அம்மா திரையுலகில் இருந்தால் அவர்கள் வழியில் வாரிசுகளும் வந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் எளிதில் கிடைத்தாலும் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடிகிறது. அப்பாவோ அல்லது அம்மாவோ பெரிய ஆள் என்பதால் மட்டும் வாரிசுகளால் நிலைத்து நிற்க முடியாது. இதை கோலிவுட் பிரபலங்களின் வாரிசுகளுக்கு நன்றாகத் தெரியும்.சூப்பர் ஸ்டார்​சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்ணா கேட்டு வாங்குங்க கொதித்த ரஜினி ரசிகர்​​கமல் ஹாசன்​Rajinikanth: சூப்பர் ஸ்டார், தளபதிக்கு எல்லாம் மேலே ஒருவர் இருக்கார், அவர் தான்…: ரோபோ சங்கர்உலக நாயகன் கமல் ஹாசனின் மகள்கள் ஸ்ருதியும், அக்ஷராவும் பெற்றோர் வழியில் நடிக்க வந்துவிட்டார்கள். ஸ்ருதியின் கெரியர் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயன்று கொண்டிருக்கிறார் அக்ஷரா. தன் பிள்ளைகள் என்பதால் கமல் உதவி செய்யவில்லை. அவர்கள் தன் சொந்த முயற்சியால் மட்டுமே முன்னேற வேண்டும் என்று விட்டுவிட்டார்.

​ரஜினி​Jailer: ஜெயிலர் தீயா இருக்கு, கப் அடிக்கும் பிகிலு: முதல் விமர்சனம் இதோசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் அப்பா வழியில் நடிக்க வரவில்லை. இருவருமே திரையுலகில் இருந்தாலும் கேமராவுக்கு பின்னால் இருக்கவே விரும்புகிறார்கள். ஐஸ்வர்யாவும் சரி, சவுந்தர்யாவும் சரி இயக்குநர்களாக வலம் வருகிறார்கள். அவர்களுக்கு எது விருப்பமோ அதையே செய்யட்டும் என்று ரஜினியும் விட்டுவிட்டார்.

​லால் சலாம்​ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக கெரியரில் இருந்து பிரேக் எடுத்த ஐஸ்வர்யாவின் கம்பேக் படம் தான் லால் சலாம். அதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். மொய்தீன் பாயாக வருகிறார் ரஜினிகாந்த். கவுரவத் தோற்றம் தான் என்றாலும் படத்தில் சுமார் ஒரு மணிநேரம் ரஜினியை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
​சரத்குமார்​சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள்களில் மூத்த மகள் வரலட்சுமி மட்டும் அப்பா வழியே என் வழி என்று நடிக்க வந்துவிட்டார். நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்க மாட்டார் வரலட்சுமி. வில்லியாக வந்தால் ஹீரோயினையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறார். கொடுக்கும் கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களின் கைதட்டல்களை பெற்று வருகிறார் வரலட்சுமி.
​அர்ஜுன்​ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா பெரிய படிப்பு எல்லாம் படித்திருந்தாலும் அப்பா, அம்மா வழியில் நடிக்க வந்தார். விஷாலின் பட்டத்து யானை படம் மூலம் நடிகையானார். ஆனால் அவரின் கெரியர் பிக்கப் ஆகவில்லை. இந்நிலையில் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்களுக்கு திருமணம் என்று கூறப்படுகிறது.

​சத்யராஜ்​சத்யராஜுக்கு மகள் இருந்தாலும் அவர் அப்பா வழியில் நடிக்க வரவில்லை. சத்யராஜின் மகன் சிபி தான் நடிகரானார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார் சிபி சத்யராஜ். திறமையான நடிகராக இருந்தாலும் அவருக்கு பெரிய பிரேக் கிடைக்காமல் இருக்கிறது. அது விரைவில் நடக்கும் என நம்பப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.