TTD chairman inaugurates new hostel block for students at Tirupati | மாணவர்களுக்காக புதிய விடுதி கட்டடம்: திருப்பதி தேவஸ்தான தலைவர் திறப்பு

திருப்பதி: திருப்பதியில் ஆதரவற்றோருக்கான செயல்படும் பாலமந்திரம் பள்ளி மாணவர்களுக்கான விடுதிக்கு, கூடுதலாக கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஓய்வி சுப்பா ரெட்டி மற்றும் கோயில் அதிகாரி தர்மா ரெட்டி திறந்து வைத்தனர். பிறகு, மாணவர்களுடன் அவர்கள் கலந்துரையாடினர். இந்த புதிய கட்டடங்கள் ரூ.11 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளன.

அப்போது சுப்பா ரெட்டி பேசியதாவது: கடந்த 1943ம் ஆண்டு, ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக அடைக்கலம் மற்றும் கல்வி வழங்குவதற்காக ‛எஸ்வி ஆதரவற்றோர் இல்லம்’ இல்லம் உருவாக்கப்பட்டது. 1961 ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஆந்திர முதல்வர் நீலம் சஞ்சிவ் ரெட்டி ஆகியோர் இங்கு வந்தனர்.

latest tamil news

அப்போது இதனை பாலமந்திரம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். உடனடியாக பெயர் மாற்றம் செய்தோம். மேலும், இது திறமாக செயல்பட தனியாக அறக்கட்டளை ஒன்றும் உருவாக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

latest tamil news

மேலும், ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் மையத்தின் பார்வையாளர்கள் வசதிக்காக ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்ட தங்குமிடத்தையும் சுப்பா ரெட்டி திறந்து வைத்தார்.

latest tamil news
latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.