‘பிதாமகன்’ தயாரிப்பாளர் துரை நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு கால்கள் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு திரையுலகம் சார்ந்த சிலர் உதவி செய்து வந்தனர்.
இந்த நிலையில் அவருக்கு செயற்கை கால் பொருத்த வேண்டிய நிலைமை இருந்தது. தங்கலான் படப்பிடிப்பில் இருந்து திரும்பி வந்த நடிகர் விக்ரம் அவரது இந்த நிலைமையை அறிந்து துடித்து விட்டார். அவருக்கு நல்ல தரமான செயற்கை காலை இரண்டரை லட்சத்திற்கு மேல் செலவு செய்து அளித்திருக்கிறார். அவரது செலவுக்கும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார். இது மட்டுமில்லை இனி வேண்டிய உதவிகளையும் செய்து தருவதாகவும், அவரோடு தொடர்பில் இருந்து வேண்டியதைச் செய்வதாகவும் சொல்லியிருக்கிறார். யாரும் கண்டுகொள்ளாத போது விக்ரமின் உதவி பெரும் பேசுபொருளாகி வருகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/chiyaan_vikram_shares_best_moments_from_journey_of_ponniyin_selvan_i_01.jpg)
தன் வீட்டில் பணிபுரிந்தவரின் வீட்டுத் திருமணத்திற்கு திடீரென விக்ரமே வந்து அங்கு இருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, ஆனந்தக் கண்ணீரில் நனைத்தது முன்பே இணையத்தில் வைரலானது. மேற்கொண்டும் விக்ரமின் நல் உதவியாய் இதைப் பார்க்கிறது தமிழ்த் திரையுலகம்.
இந்த உதவிகளில் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார் தயாரிப்பாளர் துரை. `பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட உதவிக்கு வரும் கைகள் மேலானவை!’ என்பதாக இங்கர்சாலின் பொன்மொழி ஒன்று இருக்கிறது. அது அவ்வப்போது நிகழ்ந்து விடுகிறது.