‛குட் நைட்' மணிகண்டனின் அடுத்த படம் துவங்கியது
நடிகர் மணிகண்டன் காலா, ஜெய் பீம், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெய் பீம் படம் அவருக்கு பெரும் திருப்புமுனையை தந்தது. சமீபத்தில் வெளிவந்த 'குட் நைட்' படத்தின் மூலம் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றார்.
தற்போது மணிகண்டனின் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, அறிமுக இயக்குனர் பிரபு ராம் இயக்கத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடிக்கிறார். இதில் கவுரி ப்ரியா ரெட்டி, கண்ணா ரவி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். சான் ரோல்டன் இசையமைக்கிறார். இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இதில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு க்ளாப் போர்டு அடித்து இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி வைத்துள்ளார்.