‛தங்கலான்' – அசத்தல் தோற்றத்தில் மாளவிகா மோகனன்
‛பேட்ட' படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நடிகை மாளவிகா மோகனன் அதன்பின் மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது விக்ரமுடன் ‛தங்கலான்' படத்தில் நடித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். கேஜிஎப் பின்னணியில் தமிழர்களை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன.
இந்த படத்திற்காக பல தற்காப்பு கலைகளை கற்று நடித்துள்ளார் மாளவிகா. இந்நிலையில் மாளவிகாவின் பிறந்தநாளான இன்று(ஆக., 4) அவரது பட போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். இதில் ஆரத்தி என்ற வேடத்தில் அவர் நடித்துள்ளார். கையில் கத்தி உடன் கூடிய வேல்கம்பு, கழுத்து நிறைய பாசி கலந்த மாலைகள், கையில் காப்பு, தலையில் வித்தியாசமான கிரீடம், மூக்கு மற்றும் வாயில் சிறிய அணிகலன் என வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார் மாளவிகா. சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்ட கதை என்பதால் அந்த தோற்றத்தில் பழங்குடியின பெண் போன்று உள்ளார்.
ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது.