டில்லி தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிய விவகாரத்தில் உறுதுணையாக இருந்த இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி நன்றியைத் தெரிவித்துள்ளார். சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதனால் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர். பதவி பறிக்கப்பட்டது. குஜராத் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்த நிலையில், ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி சஞ்சய் […]