தலைமுடியில் ரூ.3,000 கோடி வருமானம்… 40 பர்சண்டை தட்டி தூக்கிய குட்டி பாக்யா நகர்!

சலூன் கடைகளில், கோயில்களில் மொட்டை அடிக்கும் வெட்டப்படும் தலைமுடி என்னவாகும் என்று யோசித்திருக்கிறீர்களா? பலரும் அந்த முடியை ஒருகணம் கூட நின்று பாத்திருக்க மாட்டார்கள். ஆனால் இதை வைத்து பல்லாயிரம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அதுதான் உண்மை.

பாக்யா நகர் தலைமுடி பிஸினஸ்ஒட்டுமொத்த இந்தியாவை எடுத்துக் கொண்டால் டெல்லி, சென்னை, ஆந்திர மாநிலத்தின் எலூர், மேற்குவங்க மாநிலத்தின் பாகாபன்பூர் மற்றும் முர்ஷிதாபாத், ராஜஸ்தான் மாநிலத்தின் டிக் ஆகிய நகரங்கள் தலைமுடி விற்பனையில் முக்கிய பங்காற்றுகின்றன. இவற்றுக்கு எல்லாம் கோட்டையாக விளங்குவது கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாக்யா நகர். இது பெங்களூருவில் இருந்து 380 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.​துங்கபத்ரா அணை கட்டுமானம்இந்தியாவின் தலைமுடி வர்த்தகத்தில் 40 சதவீத பங்கு இந்த பாக்யா நகருக்கு உரியது. இதன் வரலாறு சற்றே சுவாரஸியமானது. 1947ல் நாடு சுதந்திரம் அடையும் வரை இந்த பகுதி மக்கள் விவசாயத்தை தான் பிரதானமாக மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து 50களில் துங்கபத்ரா அணை கட்ட திட்டமிடப்பட்டது. இதன் காரணமாக பலரது நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு கொப்பல் அருகே புது வாழ்வை தொடங்க ஆரம்பித்தனர். இந்த பகுதி தான் பின்னாளில் ”பாக்யா நகர்” என மாறியது.
​தலைமுடி யூனிட்களின் வளர்ச்சிஇங்கு வந்த செட்டில் ஆனவர்கள் தலைமுடியை சேகரித்து விற்கும் வர்த்தகத்தை சிறிய அளவில் தொடங்கியுள்ளனர். 60களில் 6 தலைமுடி சேகரிக்கும் யூனிட்கள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு படிப்படியாக தொழில்நுட்பங்களை வசப்படுத்தி கொண்டு மேம்படத் தொடங்கியது. தற்போது 200 தலைமுடி சேகரிக்கும் யூனிட்களும், அவற்றில் சுமார் 8,000 தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். பாக்யா நகரை சுற்றி 25 கிலோமீட்டர் சுற்றளவில் தலைமுடி வர்த்தகம் தான்.உலக நாடுகளுக்கு ஏற்றுமதிஇங்கு பலகட்ட மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும் தலைமுடியானது, முடியில்லாத மக்களுக்கும், படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் விதவிதமான டிசைனில் விக் அணிவதற்கும் பயன்படுகிறது. இது ஒரு உதாரணம். இன்னும் பல விஷயங்களுக்கு தலைமுடி பயன்படுத்தப்படுகிறது. பாக்யா நகரில் இருந்து சீனா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மியான்மர் போன்ற நாடுகளுக்கு தலைமுடி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஒரு கிலோ 25 ஆயிரம் ரூபாய்இந்தியாவின் தலைமுடி மிகவும் தரமானது என்ற பார்வை சர்வதேச அளவில் இருக்கிறது. இதனால் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தலைமுடிக்கு மவுசு அதிகம். கருப்பு முடி ஒரு கிலோ 5,000 ஆயிரம் ரூபாயும், வெள்ளை முடி ஒரு கிலோ 2,500 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையாகின்றன. கோயில்களை பொறுத்தவரை மொட்டை அடிக்கும் நபர்கள் அதிகம் என்பதால் தலைமுடி நீட்டமாக கிடைக்கும். இதனால் இங்கு ஒரு கிலோ முடி 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும் எனக் கூறுகின்றனர்.
​தலைமுடி கடத்தி விற்பனைஇதில் ஆச்சரியப்படும் விஷயம் ஒன்று இருக்கிறது. இந்தியாவில் இருந்து சீனா, மியான்மர் நகரங்களுக்கு தலைமுடியை கடத்தி சென்று விற்கவும் செய்கின்றனர். அந்த அளவிற்கு இந்திய தலைமுடிக்கு மார்க்கெட் இருக்கிறது. இதை ஒடுக்க வேண்டும் என்று தலைமுடி வர்த்தகம் செய்யும் நபர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வருவது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.