திருப்பதி பக்தர்களுக்கு ஷாக்: முடங்கிய பேருந்து போக்குவரத்து – வார இறுதியில் இப்படி ஒரு சிக்கல்!

ஆந்திர மாநிலத்தில் வெடித்த கலவரம் காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் திருப்பதி செல்லும் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம்ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று சுற்று பயணம் மேற்கொண்டார். அப்பகுதியில் நீர் மேலாண்மை திட்ட பணிகளை பார்வையிட சென்றபோது சந்திரபாபு நாயுடுவை அங்கநல்லு என்ற இடத்தில் தடுத்து நிறுத்திய ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்கள் கோ பேக் சந்திரபாபு நாயுடு என முழக்கமிட்டனர்.தெலுங்கு தேசம் – ஒய்எஸ்ஆர்
இதனால் இருக்கட்சி தொண்டர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்கள், பீர் பாட்டில்கள், சோடா பாட்டில்கள் என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வைத்து தாக்கிக் கொண்டனர். மேலும் கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர்.
மேலும் அப்பகுதியில் நின்றிருந்த வாகனங்களையும் தீயிட்டு கொளுத்தினர்.
காவல்துறையினர் காயம்இதில் ஏராளமான வாகனங்கள் தீக்கு இரையாகின. மோதலை தடுக்க முயன்ற காவல்துறையினர் மீதும் இருக்கட்சி தொண்டர்களும் தாக்குதல் நடத்தினர். இதில் காவல் துறையினர் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதை தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர்.
முழு அடைப்பு
இருப்பினும் மோதல் தொடர்ந்ததை அடுத்து தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டினர். இந்நிலையில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரு கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட இந்த கலவரத்தால் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு நடைபெறுகிறது.
பேருந்துகள் நிறுத்தம்இதனால் மாவட்டம் முழுக்க பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் சித்தூர் செல்லூம் சுமார் 30 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன,

திருப்பதி செல்லும் பேருந்துகள்சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சாலைகளில் மரங்களை வெட்டி சாய்த்தும் கற்களை போட்டும் போக்குவரத்தை துண்டித்துள்ளனர். இதனால் திருப்பதி, காளஹஸ்தி, சித்தூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வேலூர் மற்றும் குடியாத்தம் பேருந்து நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
​ ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு… துர்கா பூஜை ஸ்பெஷல் ஆஃபர்!​பக்தர்கள் அதிர்ச்சிஇதேபோல் திருப்பதியில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகளும் சித்தூரிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகளவு பக்தர்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த கலவரம் மற்றும் முழு அடைப்பால் போக்குவரத்து சேவை முடங்கியிருப்பதால் பக்தர்கள் திருப்பதி செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். திருப்பதி சென்ற பக்தர்களும் ஊர் திரும்ப முடியாமல் அவதியடைந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
​ ‘யாழ்நிலா’ சொகுசு ரயில் சேவை தொடக்கம்… டிக்கெட் எவ்வளவு தெரியுமா?​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.