தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக போய்க்கொண்டிருப்பது அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்பது தான். என்னதான் ரஜினிக்கு தற்போது வயதானாலும் தமிழ் சினிமாவில் எப்போதும் நிரந்தர சூப்பர்ஸ்டார் அவர்தான் என ரஜினியின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மறுபக்கம் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என அவரது ரசிகர்கள் அடித்து கூறுகின்றனர். இதன் காரணமாகவே இரு ரசிகர்கள் மத்தியில் மோதல்கள் வெடித்து வருகின்றது. இதுபோக ஒரு சில பிரபலங்களும் சூப்பர்ஸ்டார் பட்டத்தை பற்றி தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். அதுவும் ரசிகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ஆசை
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் இருந்து ஹுக்கும் என்ற பாடல் வெளியானது. இப்பாடலில் இடம்பெற்ற வரிகள் விஜய் ரசிகர்களை சீண்டியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். இது இவர்களின் மோதலை மீண்டும் அதிகரித்துள்ளது. இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ரஜினி பெரியவர்..விஜய்யும் பெரிய ஆள்..எனவே..ஓபனாக பேசிய மிஸ்கின்..!
இதில் பேசிய ரஜினி, காக்கா, கழுகை வைத்து குட்டி கதை ஒன்றை கூறினார். கழுகு உயர பறக்கும், காகம் அதை கொத்த நினைக்கும். ஆனால் கழுகின் உயரத்தை காகத்தால் எட்ட முடியாது என கூறினார் ரஜினி. இதையடுத்து ரஜினி தன்னை கழுகாகவும், விஜய்யை காகமாகவும் வைத்து தான் இந்த கதையை கூறியுள்ளார் என ஒரு சிலர் கிளப்பிவிட இது உச்சகட்ட மோதலுக்கு வழிவகுத்தது.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் சூப்பர்ஸ்டார் பட்டத்தை பற்றி பேசிய வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு அஜித் ஒரு மேடையில், தான் அடுத்த சூப்பர்ஸ்டாராக வேண்டும் என ஆசைப்படுவதாக கூறினாராம். இதையடுத்து அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்ததாம்.
வெளிப்படையாக பேசிய அஜித்
இதைப்பற்றி பேசிய அஜித், நான் சூப்பர்ஸ்டார் இடத்தை அடைய ஆசைப்படுவதாக கூறினேன். அதன் பிறகு பல விமர்சனங்களை சந்தித்தேன் என்றார் அஜித். தற்போது சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து பரபரப்பாக போய்க்கொண்டிருக்க அஜித்தின் இந்த பழைய பேட்டி இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் அஜித் தற்போது மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் துவங்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.