வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புனே, மஹாராஷ்டிராவில், வகுப்பில் பாடம் நடத்தும் போது ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்திய கல்லுாரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயில், அரசு உதவி பெறும் சிம்பயோசிஸ் கலை மற்றும் வணிகவியல் கல்லுாரி உள்ளது.
இங்கு, அசோக் தோலே என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
சமீபத்தில் இவர் வகுப்பில் பாடம் நடத்தும் போது, ஹிந்து கடவுள்கள் குறித்து அவமரியாதையாக பேசியுள்ளார்.
இதை, வகுப்பில் இருந்த மாணவர் ஒருவர், தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இது வேகமாக பரவியதை அடுத்து, ஆர்.எஸ்.எஸ்.,சின் மாணவர் அமைப்பான, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள், பேராசிரியர் அசோக் தோலே மீது நடவடிக்கை எடுக்கும் படி, கல்லுாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், பேராசிரியர் அசோக் தோலேவை நேற்று கைது செய்தனர்.
அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அசோக் தோலேவை சஸ்பெண்ட் செய்து கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement